பதிவு செய்த நாள்
25
அக்
2018
02:10
குளித்தலை: சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற, உச்ச நீதிமன்ற உத்தரவை திரும்ப பெறகோரி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.குளித்தலை சுங்ககேட்டில் நேற்று (அக்., 24ல்) காலை, 11:00 மணியளவில், நடந்த ஊர்வலத்திற்கு, மாநில பிரசார பிரிவு தலைவர் குமாரகிருஷ்ணன் தலைமை வகித்தார். சுங்ககேட் ரவுண்டானாவில் தொடங்கி, காந்தி சிலை, பஸ் ஸ்டாண்ட் வழியாக ஐயப்பன் கோவில் சென்றடைந்தது. அப்போது பேசிய மாநில பிரசாரகுழு தலைவர் குமாரகிருஷ்ணன், "கேரள அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய மனு செய்ய வேண்டும்,” என வலியுறுத்தினார். ஊர்வலத்தில், கரூர் மாவட்ட பிரசார குழு தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட தலைவர் முருகானந்தம் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.