திருப்புத்தூர் திருக்கோஷ்டியூர் கோயில்களில் அமைச்சர்கள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2018 02:10
திருப்புத்தூர்:திருப்புத்தூர் அருகே அரளிக்கோட்டை மற்றும் திருக்கோஷ்டியூர் கோயில்களில் அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு நடத்தினார்.அரளிக்கோட்டை சென்ற அமைச்சர் ராமச்சந்திரன் அங்குள்ள சோழீஸ்வரர் தம்பிராட்டி அம்மன் கோயில் திருப்பணி குறித்து ஆய்வு நடத்தினார்.
கோயில் புனரமைக்க இந்து அறநிலையத்துறை நிதயுதவியுடன் திருப்பணிகள் நடைபெற்று வந்ததும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி நின்றது குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
பின்னர் திருக்கோஷ்டியூர் சென்று சவுமியநாராயணப்பெருமாள் தங்க விமான திருப்பணி பல ஆண்டுகளாக நின்றது குறித்தும், தங்கத் தகடு தரம் குறித்து ஆய்வு செய்ய துணை ஆணையர் நியமிக்கப்படாததால் திருப்பணியில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் அமைச்சர் ராமச்சந்திரன்அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
அதிகாரிகள் அதற்கு மழுப்பலான பதிலையே தந்தனர். மேலும் பட்டமங்கலம் கோயில் குறித்தும் அதிகாரிகளிடம் விசாரித்தார்.