பதிவு செய்த நாள்
25
அக்
2018
03:10
ஸ்ரீவில்லிபுத்தூர்.:ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயில் புரட்டாசி சனி உற்சவத்திலும், ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலிலும் பக்தர்களின் காணிக்கையாக ரூ.50 லட்சம் வசூலானது.
புரட்டாசி முதலாம் சனியன்று ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்து 574, இரண்டாம் சனியன்று ரூ.4 லட்சத்து 33 ஆயிரத்து 581, மூன்றாம் சனியன்று 8 லட்சத்து 80 ஆயிரத்து 495, நான்காம் சனியன்று ரூ.5 லட்சத்து 16 ஆயிரத்து 237, ஐந்தாம் சனியன்று ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 945 என ரூ.25 லட்சத்து1,832 ஐ காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2 லட்சத்து 88 ஆயிரத்து 832 கூடுதலாகும்.
இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று (அக்.,24ல்) நடந்த உண்டியல் திறப்பில் ரூ. 25 லட்சத்து 24 ஆயிரத்து 104 , 172கிராம் தங்கம், 599 மில்லிகிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், செயல்அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர்.