அருணகிரிநாதர் தமது திருப்புகழில் ‘முள்வாய் விளங்க நின்ற பெருமாளே ’ என்று போற்றிப் பாடியுள்ளார். அருணகிரியார் ‘முள்வாய்’ என்று போற்றும் தலம் எது? திருப்புகழ் ஆராய்ச்சியாளர் தணிகைமணி அவர்கள் இதுகுறித்து ‘இடம் இன்னதென்று விளங்கவில்லை ’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், முருகவேள் முன்னின்று உணர்த்தினால் புலப்படாததும் உண்டோ? வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் அருகே, கோணலம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து சுமார் 5 கி.மீ. சென்றால் முள்வாய் என்ற கிராமத்தை அடையலாம். இதனை ‘முள்வாய் பாளையம்’ என்று கூறுகிறார்கள். இதுவே அருணகிரியார் போற்றிய தலம் என்கிறார்கள், முருகன் அடியார்கள்!