மும்பை சி.எஸ்.டி. ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மும்பா தேவி கோயில். இங்கே ரிஷப வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள் அம்பிகை. நவராத்திரி ஒன்பது நாளும் தேங்காய் உடைத்து அதன் நீரை அம்பிகையின் வாகனத்திலேயே ஊற்றி விடுகின்றனர். இதேபோல் நவராத்திரி நாட்களில் வளர்க்கப்படும் ஹோம சாம்பலை புருவத்தில் பூசிக் கொள்வார்களாம்.