பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மதன கோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 1,500 வருடங்கள் பழமையான இக்கோயில் மன்னன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. முகப்பு மண்டபத்தில் வடக்கு நோக்கி உள்ளது லட்சுமி ஹயக்ரீவர் சன்னதி. அதற்கு எதிரிலேயே கலைமகளாம் சரஸ்வதி தேவியும் தனி சன்னதி கொண்டிருக்கிறார். கல்வி, ஞானம் அருளும் இரண்டு தெய்வங்களும் இப்படி நேருக்கு நேர் பார்ப்பது போன்று எழுந்தருளியிருப்பது விசேஷம்!