Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 63 ... பட்டிவீரன்பட்டி சித்தரேவு பெருமாள் கோயில் நிலங்கள் மீட்கப்படுமா பட்டிவீரன்பட்டி சித்தரேவு பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை சன்னிதானத்தில் தங்குவதற்கு தடை: போராட்டத்தை தடுக்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:
சபரிமலை சன்னிதானத்தில் தங்குவதற்கு தடை: போராட்டத்தை தடுக்க நடவடிக்கை

பதிவு செய்த நாள்

26 அக்
2018
12:10

சபரிமலை: சபரிமலையில் போராட்டத்தை தடுக்க ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தவும், சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதை தடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறினார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு எதிராக போராட்டம், வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது.


கொல்லத்தில் நடைபெற்ற அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் உரிய வசதி செய்து கொடுக்க வேண்டிய கடமை தேவசம்போர்டு மற்றும் அரசுக்கு உண்டு. தரிசனத்திற்கு முன்பதிவு வசதி செய்யப்படும். ஒரு நாளில் எத்தனை பேரை அனுமதிக்க முடியுமோ அவர்கள் மட்டுமே சன்னிதானத்தில் அனு மதிக்கப்படுவார்கள்.


மீதமுள்ளவர்கள் நிலக்கல்லில் தங்க வேண்டும். சன்னிதானத் தில் யாரும் தங்க முடியாது. அங்கு தங்கி கலவரம் ஏற்படுத்த நினைப்பவர்கள் அதை மாற்றிக்கொள்ளுங்கள். இவ்வாறு பேசினார்.முதல்வர் பேச்சையடுத்து, தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் சன்னிதானத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். மலையிலேயே தங்கி ஒன்றுக்கும் மேற்பட்ட பூஜைகளில் கலந்து கொள்ள முடியாது.சன்னிதானத்தில் தங்குவதற்கு ஊழியர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அனுமதிச்சீட்டு வழங்கப்படும் உள்ளிட்டவற்றை அமல்படுத்த தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

1400 பேர் மீது வழக்கு: இதற்கிடையில் சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நேற்று வரை 1407 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 258 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 210 பேர் படங்கள் வெளியிடப் பட்டுள்ளது.மலைக்கு பெண்கள் வந்தால் ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்துவோம் எனக் கூறிய தந்திரி குடும்ப மகள் வழி பேரன் ராகுல் ஈஸ்வர் நேற்று முன்தினம் கூறியிருந்தார். இதற்கு தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் அவ்வாறு கூறவில்லை என்றும், ரத்தம் சிந்த 20 பேர் தயாராக இருந்ததாக வும், அவ்வாறு செய்யக்கூடாது என்று கூறி தடுத்த தாகவும் ராகுல்ஈஸ்வர் முகநுாலில் கூறியுள்ளார்.

தந்திரி மீது வழக்கு: ரஹானா பாத்திமா வந்தபோது உதவி பூஜாரிகள் 18-ம் படிக்கு கீழே போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தந்திரி கண்டரரு ராஜீவரரு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து தந்திரி கூறியதாவது: சபரிமலை ஆசாரங்களை கடைபிடிப்பதில் நானும், பிற தந்திரிகளும் உறுதியாக உள்ளோம். வேறு கருத்துகள் சொல்ல விரும்பவில்லை. ஐயப்பன் முன்னால் அனைத்தையும் சமர்ப்பிக்கிறோம், என்றார்.

மனு தள்ளுபடி: இதற்கிடையில் அடிப்படை வசதிகள் செய் யப்பட்ட பின்னர் மட்டுமே பெண்களை சபரி மலையில் அனுமதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரள உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது, என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு ரத வீதியில் ரூ. 14 லட்சம் செலவில் நிழல் தரும் பந்தல் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar