பதிவு செய்த நாள்
27
அக்
2018
12:10
ராஜபாளையம்: நவீன காலத்தில் எதையும் பொருட்படுத்தாமல் இறைவன் நாமத்தை போற்றி பாடுவது மட்டுமே தலையாய பணியாக கொண்டுள்ளனர் பஜனை குழுவினர்.
இவ்வாறான குழுக்களில் ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் பஜனை குழுவின ரும் இறைவனின் மீதான புகழை தொடர்ந்து பஜனை, கூட்டு வழிபாடுகளின் மூலம் செய்து வருகின்றனர். இதில் பணி நிறைவு ஆதிகாரிகள் முதல் தற்போது பணியில் உள்ள ஆசிரியர், மில் தொழிலாளிகள், தினக்கூலி தொழில், செய்வோர், இல்லத்தரசிகள், மாணவர்கள் என அனைவரும் பங்கேற்கின்றனர்.
இவர்கள் ஆண்டு முழுவதும் முறை வைத்து பெருமாள் கோயில்களில் ஒன்று கூடி பஜனை மூலம் பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.
இக்குழுவில் உள்ள காளிமுத்து கூறுகையில், ""உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி நிறைவு பெற்றதும் இறைவன் மேல் கொண்ட பக்தியில் இக்குழவினரோடு இணைந்து பஜனை, பிரார்த்தனை, உபநியாசம் போன்ற இறை தொண்டினை தொடர்கிறேன்.
ஒவ்வொரு சனிக்கிழமைகளும் கோயில்களில் முறை வைத்து ஆஜராகி விடுவோம். வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை, அய்யனாபுரம், ஆசிலாபுரம் போன்ற கோயில்களில் குழுவாக சென்று பாடி வருகிறோம். இது தவிர புரட்டாசி, மார்கழி, கிருஷ்ண ஜெயந்தி, மார்கழி பஜனை, வீதி பஜனை, கோலாட்டம், நர்த்தனம் தவிர பக்தர்களின் அழைப்பிற்கு ஏற்ப வீட்டு விஷேசங்களுக்கு சென்று நாமாவளி பஜனை நடத்துவோம்.
வாய்ப்பு உள்ளவர்களாக சேர்ந்து ஆண்டு முழுவதும் திவ்ய தேசங்களுக்கு சென்று இறை வனை தரிசித்து புகழ் பாடி வருகிறோம்.
இறைவனின் நாம மகிமை குறைவது போல் தோற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், அடுத்த டுத்த சந்ததியினரும் இறை புகழை ஒற்றுமையுடன் பாடி பரப்புவதற்கு இத்தகைய பஜனை குழுக்களின் சேவை அவசியம், என்றார். இவர்களின் இறை சேவையை பாராட்ட 94444 06862 பேசலாம்.