திருப்புவனம்: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஏராளமான கோயில்களுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் இருந்தன. அவற்றில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலம் கோயில்களில் பூஜைகள் செய்யப்பட்டன. கோயில்களில் சுவாமிகளுக்கு பூஜை செய்ய மாலைகள் தொடுக்க ஒவ்வொரு கோயில்களுக்கும் நந்தவனம் இருந்தது.
அதில் மல்லிகை, முல்லை, கதம்பம், அரளி, நந்தியாவட்டை, பிச்சி, செம்பருத்தி, கனகாம் பரம், செவ்வந்தி உள்ளிட்ட மலர்கள் பயிர் செய்யப்பட்டு பறிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பெரும்பாலான கோயில்களில் நந்தவனங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன.
திருப்பாச்சேத்தி மருநோக்கும் பூங்குழலி அழகியநாதர் கோயில் இன்று வரை நந்தவனம் ஒரு ஏக்கரில் அப்படியே உள்ளது. செம்பருத்தி, அரளி, நந்தியாவட்டை உள்ளிட்ட ஒரு சில பூச்செடிகள் மழையை நம்பி வளர்ந்துள்ளன. அவற்றில் இருந்து பூஜைக்கு பூக்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.