பதிவு செய்த நாள்
28
அக்
2018
02:10
சென்னை: கோவில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு, முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும், என, அறநிலையத்துறை அமைச்சர், ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.கோவில் வளாக துாய்மை குறித்து, சென்னையில் நடந்த, கருத்தரங்கை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:கோவில்களில் சேகரிக்கப்படும் திடக்கழிவு, கோசாலையில் இருந்து பெறப்படும் மாட்டு சாணம் போன்றவற்றின் வாயிலாக, சாண எரிவாயு கலன் அமைக்கப்படுகிறது.தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, கோவில்களில் பிளாஸ்டிக் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு, அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். கோவில் வளாகங்களில் சேகரமாகும் கழிவுகளை அகற்றுவது சவாலான பணி. இதை, கோவில் நிர்வாகம் மட்டும் செய்ய முடியாது; தன்னார்வலர்களும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.