அலங்காநல்லுார்;அழகர்கோவில் சோலைமலை முருகன்கோயில் வித்தக விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதே கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கும், அருகில் உள்ள ஆதிவேல் சன்னதியிலும் விசேஷ பூஜை நடந்தது.