பதிவு செய்த நாள்
28
அக்
2018
02:10
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் சனீஸ்வர பகவான் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சொர்ண சிதம்பர மகா கணபதிக்கு, 1,008 கொழுக்கட்டை ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்காரம்நேற்று நடந்தது.தொடர்ந்து, சுவாமிக்கு சோப சார பூஜைகள் நடந்தது.சங்கடஹர சதுர்த்தி பூஜையை கோவில் நிறுவனர் சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம குருக்கள் செய்திருந்தனர். ஏற்பாடுகளை சீதாராம், மகாலட்சுமி, ஸ்ரீராம வெங்கடேச சர்மா, சீதாலட்சுமி, அனந்தராமன், ஸ்ரீநிதி லட்சுமி பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.