Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சவாலை துணிவுடன் ஏற்றுக்கொள் பக்தையின் பெயரில் மரம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உணவு, உடை குறைவின்றி வாழ... சுந்தரரின் பாடலை தினமும் படிங்க
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2018
05:10

1. தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே; எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும்,
ஏத்தலாம்இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.

2. மிடுக்கு இலாதானை ‘வீமனே, விறல்
விசயனே, வில்லுக்கு இவன்” என்று
கொடுக்கிலாதானைப் ‘பாரியே” என்று
கூறினும் கொடுப்பார் இலை;
பொடிக்கொள் மேனி, எம் புண்ணியன்,
புகலூரைப் பாடுமின் புலவீர்காள்;
அடுக்குமேல் அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.

3.‘காணியேல் பெரிது உடையனே, கற்று
நல்லனே, சுற்றம் நல்கிளை
பேணியே, விருந்து ஓம்புமே” என்று
பேசினும் கொடுப்பார் இலை
பூணி பூண்டு உழப்புள் சிலம்பும், தண்
புகலூர் பாடுமின் புலவீர்காள்;
ஆணியாய் அமருலகம் ஆள்வதற்கு,
யாதும் ஐயுறவு இல்லையே.

4.நரைகள் போந்து மெய் தளர்ந்து, மூத்து, உடல்
நடுங்கி நிற்கும் இக்கிழவனை
“வரைகள் போல், திரள் தோளனே” என்று
வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புரைவெள் ஏறு உடைப் புண்ணியன்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்
அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.

5.வஞ்ச நெஞ்சனை, மா சழக்கனைப்
பாவியை, வழக்கு இலியைப்
பஞ்ச துட்டனைச், ’சாதுவே’ என்று
பாடினும் கொடுப்பார் இலை;
பொன்செய் செஞ்சடைப் புண்ணியன்,
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
நெஞ்சில் நோய் அறுத்து, உஞ்சுபோவதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.

6.நலம் இலாதானை, ‘நல்லனே” என்று
நரைத்த மாந்தரை, ‘இளையனே” என்று
குலம் இலாதானைக் ‘குலவனே” என்று
கூறினும் கொடுப்பார் இலை;
புலம் எலாம் வெறி கமழும் பூம்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்
அலமராது அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.

7. நோயனைத், ‘தடந்தோளனே” என்று
நொய்ய மாந்தரை, ‘விழுமிய
தாய் அன்றோ புலவோர்க்கு எலாம்” என்று
சாற்றினும் கொடுப்பார் இலை;
போய் உழன்று கண் குழியாதே, எந்தை
புகலூர் பாடுமின், புலவீர்காள்;
ஆயம் இன்றிப் போய், அண்டம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.

8.எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும்
ஈக்கும் ஈகிலன் ஆகிலும்
“வள்ளலே, எங்கள் மைந்தனே” என்று
வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புள் எலாம் சென்று சேரும் பூம்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
அள்ளல் பட்டு அழுந்தாது போவதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.

9.கற்றிலாதானைக், ‘கற்று நல்லனே”
“காமதேவனை ஒக்குமே”
முற்றிலாதானை, ‘முற்றனே” என்று
மொழியினும் கொடுப்பார் இலை;
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.

10.‘தையலாருக்கு ஓர் காமனே” என்றும்,
“சால நல் வழக்குடையனே
கைஉலாவிய வேலனே” என்று
கழறினும் கொடுப்பார் இலை;
பொய்கை ஆவியில் மேதிபாய்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
ஐயனார் அமருலகம் ஆள்வதற்கு,
யாதும் ஐயுறவு இல்லையே.

11.செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென்
புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவலூரன்,
வனப்பகை அப்பன், சடையன் தன்
சிறுவன், வன் தொண்டன், ஊரன், பாடிய
பாடல் பத்து இவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar