பதிவு செய்த நாள்
31
அக்
2018
12:10
மானாமதுரை:மானாமதுரையில் கார்த்திகைக்காக மண்ணால் ஆன விளக்குகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.மானாமதுரையில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆண்டு தோறும் சீசனிற்கு தகுந்தாற் போல் மண்ணால் ஆன பொருட் களை தயார் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் வரும் நவம்பர் 23ந்தேதி நடைபெற உள்ள கார்த்திகைக்காககடந்த 2 மாதங்களுக்கு முன்பே விளக்குகள் தயாரிக்கும் பணியை துவக்கி விட்டனர். சர விளக்குகள், அணையா விளக்கு,துளசி மாடம்,பெரிய கம்ப்யூட்டர் விளக்கு,குருவாயூர் ஸ்டாண்ட், 5 முக குருவாயூர் விளக்கு, நட்டு விளக்கு, 2 அடுக்கு குருவாயூர் விளக்கு,2,3 அடுக்கு தீப விளக்குகள், 1 அடுக்கு 7 சிட்டி மற்றும் 5 சிட்டி விளக்குகள், அகல் விளக்குகள்,தேங்காய் முக விளக்குகள், சாமி உருவ விளக்குகள் என ரூ.1லிருந்து ரூ. 800 வரை விளக்குகள்விற்பனைக்கு தயாராக உள்ளன.