முதுகுளத்தூர்: தேரிருவேலி கிராமத்தில் உள்ள பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.காலை 6:00 மணிக்கு விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். காலை 9:00 மணிக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
இரவு 7:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு அபிஷேக ங்கள், தீபராதனைகளுக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏரளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தேரிருவேலி யாதவர் சங்கம், ஆடு வளர்போர் சங்கம், இளைஞர் சங்கம் மற்றும் வெளிநாடு வாழ்யாதவர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.