Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிவேதன மந்த்ரங்கள்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 9. அனந்த விரதம்
அனந்த விரதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2018
16:56

இந்த விரதத்தைப் பற்றி பகவான் கண்ணனே பாண்டவர்களுக்குச் சொன்னது. “அனந்த விரதம் என்பது எல்லாப் பாவங்களையும் அகற்றி அனந்த சுகத்தைத் தரும். அனந்தமாக (முடிவில்லாத ஏராளமான) செல்வம், சந்ததி முதலிய பலனையும் கொடுக்கும். பரப்ரும்மமே அனந்தன் என்ற பெயருடன் சகல வடிவாகவும் இருக்கிறார். தற்போது பூபாரம் அகற்ற கண்ணனாக அவதரித்ததும் பகவானான பரப்ரும்மனான நானே. நான் விஸ்வரூபி என்பதைப் பல நேரங்களில் காட்டி இருக்கின்றேன். இந்த விரதத்தின் மூலம் என்னைப் பூஜை செய்து நன்மை பல பெற்ற ஒருவரதுச் சரித்திரத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்”

வசிஷ்டர் பரம்பரையில் சுமந்தர் என்பவரிருந்தார். அவரது மகள் சீலா. பெயருக்குத் தக்கபடி நல்ல சீலம் உள்ளவளாக இருந்தாள். கவுண்டின்யர் என்பவருக்கும் சீலாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து கணவனுடன் கிளம்பும்போது அவளுக்குச் சிறிதளவு சத்துமாவே தரப்பட்டது. வருத்தத்துடன் கிளம்பிய அவள் வழியில் கணவனான கவுண்டின்யர் மாத்யான்ஹிகம் செய்யும்போது நதிக்கரையில் ஏராளமான பெண்கள் தனித்தனியே பூஜை செய்வதைக் கண்டாள். விவரம் கேட்க அவர்கள் அனந்த விரதம் என்ற விரதத்தைச் செய்வதாகக் கூறி அதனுடைய முறையையும் பலன்களையும் கூறினார்கள்.

இந்த விரதத்தில் பூஜை திரவியங்கள் எல்லாம் 14 ஆகவே இருக்க வேண்டும். 14 வேத வித்துக்களுக்கும் அன்னம் அளித்து 14 வருடங்கள் விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

சீலா பக்தியுடன் 14 வருடங்கள் விரதம் இருப்பதாக சங்கல்பித்து விரதம் இருக்கத் தொடங்கினாள். விரத காலமான 14 வருடங்கள் முடிவதற்குள்ளேயே இறைவன் அருளால் அனந்தமான செல்வத்தைப் பெற்றாள். அப்போது விரதத்தை விடாமல் செய்து வந்தாள். ஆனால், செல்வச்செழிப்பினால், கர்வம் இவளது கணவரான கவுண்டின்யர் கண்களை மறைக்க ஒருநாள் தன் மனைவியான சீலாவின் கையில் கட்டப்பட்டிருந்த நோன்புக் கயிற்றை ‘இதென்ன விகாரம்’?” என்று கூறி அறுத்து நெருப்பில் போட்டார். ‘இந்தச் சரடு அனந்தனது வடிவமல்லவா? இதை எரித்தால் குலமும் வீடும் குன்றுமே ’ என்று கதறிய சீலா அக்கயிற்றை நெருப்பிலிருந்து எடுத்துப்பாலில் போட்டாள்.

நாள் போகப்போக கவுண்டின்யரது செல்வம் குறைந்தது. பசுக்கள் திருடு போயின. வீடு தீயில் எரிந்தது. உறவினருடன் சண்டை. மனம் மிகவும் வருந்திய கவுண்டின்யர். ‘அனந்தா! அனந்தா!’ என்று கதறியபடி தன் தவறை உணர்ந்து அனந்தனைத் தேடி அலைந்தார். வழியில் கண்ட அனைவரையும் விசாரித்தார்.

வழியில் ஒரு மாமரத்தைக் கண்டார். அதில் பழங்கள் நிறைய இருந்தும் ஒரு பறவை கூட மரத்தில் இல்லை. அந்த மரத்திடம், “மரமே! அனந்தனைக் கண்டாயா?”, என்று கேட்க மரமும் ‘இல்லையே ’, என்றது. சிறிது தூரம் போனதும், புல்வெளியில் ஏராளமாகப் புல் இருந்தும் அதை மேயாமல் அங்குமிங்கும் அலையும் பசுவைப் பார்த்தார். அதனிடம் கேட்க அதுவும் இல்லை என்றது. இப்படியே ஒரு காளை, இரண்டு தடாகங்கள், ஒரு யானை முதலியவற்றைக் கண்டு கேட்க அவையும் ‘இல்லை ’ என்றன. மனம் நொந்து வருந்தியபோது, அனந்தன் ஒரு வயதான அந்தண வடிவில் வந்து கவுண்டின்யர் கையைப்பிடித்து, “வா! அனந்தனை நான் உனக்குக் காட்டுகிறேன்,” என்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே நவரத்ன சிம்மாசனத்தில் கருடாரூடனாய் சங்கு சக்ரகதா பாணியாய் பீதாம்பரம் அணிந்த பகவானைக் கண்டு ‘அனந்தா ’ எனக் கதறி விழுந்து வணங்கினார். பகவானும் அருள்புரிந்தார். கவுண்டின்யருக்கு ஏராளமான செல்வம், தர்மபுத்தி, வைகுண்டப்ராப்தி என்ற மூன்று வரங்களையும் தந்தார்.

கவுண்டின்யர் தான் வழியில் பார்த்ததைக் கூறி விளக்கம் கேட்க சுவாமியும், “கவுண்டின்யா! நீ பார்த்த மாமரம் போன பிறவியில் ஒரு சிறந்த பிராமண வித்வான். உத்தமனான சீடர் பலர் வேண்டிக்கேட்டும், கர்வத்தினால் தான் கற்ற கல்வியை ஒருவருக்குமே சொல்லிக் கொடுக்கவில்லை. அதனால் மரமாகப் பிறந்தார். பசு, போன பிறவியில் நல்ல குலத்தில் உதித்த செல்வம் நிறைந்த பெண். அவள் யாருக்கும் அன்னதானம் செய்யாததால், புல் நிறைந்திருந்தும் அதை மேய முடியாத பசுவாகப் பிறந்தாள், திரிகிறாள். காளைமாடோ போன பிறவியில் கர்வமுள்ள அரசன். எதுவும் விளையாத நிலத்தை தானமாகத் தந்ததால், காளையாகப் பிறந்தான். தர்மம், அதர்மம் என்பதே இரு தடாகங்கள். தான் செய்த தர்மத்தை விலைக்கு விற்றுப் பணம் பெற்ற பிராம்மணனே யானை,” என்று கூறிப் பகவான் மறைந்தார்.

கவுண்டியன்யரும் மனைவி சீலாவுடன் சேர்ந்து மறுபடி அனந்த விரதத்தைச் செய்து பட்டுக் கயிற்றை அணிந்தார். சகல செல்வங்களையும் பெற்று நீண்டகாலம் வாழ்ந்தார்”. என்று சொல்லிக் கண்ணன் முடித்தார்.

ஒவ்வொரு வருடமும் ஆவணி அல்லது புரட்டாசியில் வளர்பிறை சதுர்த்தசி அன்று காலையில் எழுந்து நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்து, பின் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் இந்தப் பூஜையைச் செய்ய வேண்டும்.

பலன்: இந்தப் பூஜை செய்வதால் சர்வ மங்களங்களையும் இழந்து போனவற்றைத் திரும்பவும் அடையலாம்.

விரதங்கள் முதலியன செய்யத்தகாத காலம்

நீசஸ்தத்தே வக்ரஸம்ஸ்த்தே ரூப்யதிசரணகதே பாலவ்ருத்தாஸ்தகே வா
ஸன்யாஸே தேவயாத்ரா வ்ரதநியமவிதி: கர்ண வேதஸ்த தீக்ஷா
மௌஞ்ஜீபந்தோத சூடாபரிணயந விதிர் வாஸ்து தேவ ப்ரதிஷ்ட்டா
வர்ஜ்யா: ஸத்பி: ப்ரயத்நாத் த்ரிதச ’ஸதி குரௌ ஸிம்ஹராசி ’ ஸித்திதே ச

பொருள்: குரு (ப்ருஹஸ்பதி) முஹூர்த்த சமயத்தில் வக்ரம், அதிசாரம், பால்யவ்ருத்த தசை, அஸ்தமனம் மூன்று (3ல்) (அ) பத்தில் (10ல்) சிம்மராசியில் இருந்தால் விரதங்கள், உபநயனம், சீமந்தம், கல்யாணம், வாஸ்து, தேவப் பிரதிஷ்டை, உத்ஸவம், ஸந்நியாஸம், இவற்றைச் செய்யக்கூடாது.

அனந்தா பூஜா

காலம்: ஒவ்வொரு ஆண்டும் பாத்ரபத மாதத்தில் (ஆவணி மாதம் அல்லது புரட்டாசி மாதம்) சுக்லபக்ஷ சதுர்த்தி அன்று காலை வேளையில் ஸ்நானம், ஸந்தியா வந்தனம் முதலானவற்றை செய்த பின்னர் நேர்த்தியாக ஜோடித்த மணடபத்தில் அனந்த பூஜையைச் செய்ய வேண்டும்.

1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள் பட்டியல் பக்கம் 6, பக்கம் 7ம் பக்கங்களில் பார்க்கவும். இப்பூஜைக்குரிய சரடை வாங்கும் பொழுது  அனந்த விரத சரடு என்று கேட்டு வாங்குங்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறு சரடு இருக்கிறது. மற்றும் சரடின் நிறம் சிவப்பாக இருக்கும்.

பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

2. தரைமீது அஷ்டதள பத்ம வடிவில் கோல மிட்டு, அதன் மீது அரிசியைப் பரப்பி, அதன்மீது கலசத்தை வைத்து, சந்தனம், புஷ்பம், மாவிலை முதலியவற்றால் அலங்கரித்து, அதன்மீது தர்ப்பங்களால் செய்த கூர்ச்சத்தில், ஆதிசேஷனின் பிரதிமையை வைத்துக் கும்பபூஜை செய்யவும்.

3. நைவேத்ய பொருட்கள்: 14 தோசை, சாதம், பால் சாதம், சித்ரான்னங்கள், தயிர்சாதம், நெய்சாதம், பழங்கள், பட்சணங்கள், பாயசம், தேங்காய், வெற்றிலை பாக்கு, (மெத்தமாக 14 விதமான நைவேத்ய பதார்த்தங்கள் இருக்கவேண்டும்.)

4. ‘தாழம்பூ ’ வினால் அர்ச்சனை செய்வது விசேஷம்.

14 (பதினான்கு) தர்ப்பங்களை இரண்டிரண்டாக எடுத்து, நுனியில் முடிச்சுப் போட்டு அவ்வாறு முடிச்சிட்டவைகளை மூன்று காலாகப்பிரித்து ஜடைப் பின்னல்போல் பின்னி, அதைத் தென்மேற்குப் பக்கம் இருக்கும் படியாக வைக்கவும். (படத்தை பார்க்கவும்) பிறகு யமுனையைப் பிரதிஷ்டை செய்த கலசத்தின மீது வைத்த அந்தத் தர்ப்பங்களில் அனந்த பத்மநாப ஸ்வாமிக்குப் பிராணப்பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

1. பூர்வாங்க பூஜைகள்

முதலில் பக்கம் 10 பக்கம் முதல் பக்கம் 14 வரை உள்ள (தீபம்+ ஆசமனம் + குரு த்யானம் +கணபதி தியானம் +ப்ராணாயாமம் + ஸங்கல்பம் + ஆஸன பூஜை + ஆத்ம பூஜை) பூர்வாங்க பூஜைகளைச் செய்யவும்.

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

2. ஸ்ரீ. விக்னேச்வர பூஜை
(மஞ்சள் பிள்ளையார்)

ஒவ்வொரு பூஜைக்கும் முன்னால் இந்த விக்னேச்வர பூஜையை செய்ய வேண்டும்

(தியானம் + ஸங்கல்பம் + ப்ரார்த்தனை + அர்ச்சனை + நிவேதன மந்த்ரங்கள் + தீபாராதனை + நமஸ்காரம்)

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 9. அனந்த விரதம் »
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் ... மேலும்
 

அங்க பூஜை அக்டோபர் 31,2018

(ஒவ்வொரு நாமாவை சொல்லி புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)அனந்தாய        நம: பாதௌ        பூஜயாமி ... மேலும்
 
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar