பதிவு செய்த நாள்
31
அக்
2018
04:10
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)
ஓம் பூர்புவஸ்ஸுவ
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விடவேண்டும்.)
தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்.)
தேவஸவித: ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(காலையில் பூஜை செய்தால்)
தேவஸவித: ப்ரஸுவ ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)
தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.
அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)
ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யானாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,
(கீழே குறிப்பிட்ட நைவேத்தியங்களின் பெயரை சொல்லி நிவேதனம் செய்யவும்.)
அன்னம் சதுர்விதம் ஸாது பயோ ததி க்ருதம் ததா
நாநா வ்யஞ்ஜன சோ ’பாட்யம்
நைவேத்யம் ப்ரதிக்ருஹ்யதாம்
அனந்தாய நம:
மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி
மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
அம்ருதாபிதானமஸி உத்தராபோச ’னம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
நைவேத்யானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
(தாம்பூலத்தில் தீர்த்தம் விடவும்.)
கர்ப்பூர நீராஜனம் தர்ச ’யாமி
(கற்பூரம் காட்டவும்)
நீராஜனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசு’மான் பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான்
ப்ரஜாவான் பசு’மான் பவதி (புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)
அனந்தாய நமஸ்துப்யம் ஸஹஸ்ர சி’ரஸே நம:
நமோஸ்து பத்மநாபாய நாகாநாம் பதயே நம:
(சரடை நமஸ்கரிக்கவும்.)
அனந்த: காமத: ஸ்ரீமான் அனந்த்யம் மே ப்ரயச்சது
அனந்தஸ் தோரரூபணே புத்ரபௌத்ரான் ப்ரவர்த்தயேத்
என்று சரடை கையில் எடுத்துக் கொள்ளவும்.
அனந்த ஸம்ஸார மஹாஸமுத்ரே
மக்னம் ஸமப்யுத்தர வாஸுதேவ
அனந்தரூபோ வஸ மே கரே த்வம்
அனந்தஸூத்ராய நமோ நமஸ்தே
என்று பிரார்த்தனை செய்யவும்.
ஸம்ஸார கஹ்வர குஹாஸுஸுகம் விஹர்த்தும்
வாஞ்ச்சந்தி யே குருகுலோத்பவ சு’த்தஸத்வா:
ஸம்பூஜ்ய ச த்ரிபுவனேச ’மனந்ததேவம்
பத்நந்தி தக்ஷிணகரே வரதோரகம் தே
என்று வலது கையில் சரடைக் கட்டிக் கொள்க.
நமஸ் ஸர்வஹிதானந்த ஜகதானந்தகாரக
ஜீர்ணதோரம் வாஸுதேவ விஸ்ருஜாமி த்வதாஜ்ஞயா
(என்று பழைய சரடை விலக்கி விடவும்)
உபாயனதானம்
சாஸ்திரிகள் அல்லது வீட்டில் உள்ள பெரியவருக்கு கீழ்க்கண்ட மந்திரங்கøள் சொல்லி தானம் கொடுத்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.
உபாயனமிதம் விப்ர ஸபலம் தக்ஷிணாயுதம்
க்ருஹாண கருணாஸிந்து: ப்ரீயதாம் ச ஜனார்தன:
(என்று பிராஹ்மணருக்கு உபாயநம் தருக.)
அனந்த: ப்ரதிக்ருஹ்ணீயாத் அனந்தோ வை ததாதி ச
அனந்தஸ் தாரயேத் த்வாப்யாம் அனந்தாய நமோ நம:
(என்று சொல்லி, பழைய சரடை பிராஹ்மணரிடம் கொடுக்கவும்) பிறகு பிராம்மணர்களுக்கும் ஸுவாஸினீகளுக்கும் ஸமாராதனம் செய்யவும்.
புனர் பூஜை / யதாஸ்த்தானம்
பிறகு, அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ அஷ்டோத்திரம் ஜபித்து தூப, தீபம் காட்டி, பழம், பால் நைவேத்யம் செய்து, “யமுனாதேவீம், அனந்த பத்மநாப ஸ்வாமினம் ச யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோ’ பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”என்று சொல்லி புஷ்பம், அக்ஷதையை ஸ்வாமியிடம் சேர்த்து வடக்கு முகமாக நகர்த்தி வைக்கவும்.
குறிப்பு: ஒவ்வொரு வருடமும் பூஜை செய்து கட்டிக்கொண்ட சரடை அவிழ்த்து பத்திரமாக அடுத்த வருடத்துக்கு உபயோகிப்பது உத்தமம்.
(சரடைக்கட்டி கொண்டு ஆசாரங்களுடன் இக்காலத்தில் இருப்பது கடினம். ஆகையால் புனர் பூஜை செய்யும் பொழுதே இதனை அவிழ்த்து, மறு வருடம், அதே சரடை உபயோகிக்கலாம். ஆண்கள் வலது கை மணிக் கட்டிலும் பெண்கள் இடது கை மணிக் கட்டிலும் சரடைக் கட்டிக்கொள்ளவும்.)