உத்தமபாளையம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2018 12:11
உத்தமபாளையம்: க.புதுப்பட்டியில் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது கவுமாரியம்மன் கோயில். இங்கு நேற்று (அக்., 31ல்) காலை திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடக்கும். தினமும் அம்மன் வெவ்வேறு அலங் காரத்தில் நகர்வலம் வருவார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர். நேற்று (அக்., 31ல்) அனுமந்தன்பட்டியில் திருவிழா முடிவடைந்ததால், மூலவர் இந்த கோயிலிற்கு கொண்டு வரப்படுவார். இங்கு திருவிழா முடிந்ததும், மீண்டும் அம்மன் சிலை அனுமந்தன்பட்டி கோயிலிற்கு கொண்டு செல்லப்படும்.