மதுரை: மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்கான பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படுகிறது.ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளிடம் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பம் மற்றும் போலீஸ் விசாரணை அறிக்கை இருந்தால் விரைவில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
எனவே, பயணிகள் திருநெல்வேலி, மதுரை பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் விண்ணப்பங்களை கொடுத்து ஆன்லைன் - ஏ.ஆர்.என்., படிவத்தில் முன் தேதி பெற்று, ஹஜ் செல்வதற்கான விண்ணப்ப கடிதம், ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
முன் தேதி பெறுவதற்கு தாமதமானால் மதுரை பாரதி உலா ரோடு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று பெறலாம். இதற்காக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுஉள்ளார் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண் பிரசாத் தெரிவித்துஉள்ளார்.