பதிவு செய்த நாள்
01
நவ
2018
05:11
(புஷ்பம் அக்ஷதையால் அர்ச்சனை செய்யவும்.)
வல்மீக பவாய நம: பாதௌ பூஜயாமி (கால்)
ஜிதாஸுர ஸைனிகாய நம: ஜானுனீ பூஜயாமி (கணுக்கால்)
ரௌத்ரயே நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)
பயநாச ’நாய நம: ஊரு பூஜயாமி (தொடை)
பால க்ரஹோச்சாடனாய நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)
பக்தபாலனாய நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)
ஸர்வாபீஷ்டப்ரதாய நம: ஹ்ருதயம் பூஜயாமி (மார்பு)
விசா ’லவக்ஷஸே நம: வக்ஷஸ்த்தலம் பூஜயாமி (மார்பு)
அபயப்ரதான
ப்ரச’ஸ்த ஹஸ்தாய நம: பாஹூன் பூஜயாமி (புஜதண்டம்)
நீலகண்ட தனயாய நம: கண்டான் பூஜயாமி (கழுத்து)
பதித பாவனாய நம: சிபுகம் பூஜயாமி (முகவாய்)
புருஷ ச்’ரேஷ்டாய நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு)
புண்யமூர்த்தயே நம: ச்’ரவணானி பூஜயாமி (காது)
கமலலோசனாய நம: லோசநானி பூஜயாமி (கண்)
கஸ்தூரீ திலகாஞ்சித பாலாய நம: லலாடானி பூஜயாமி (நெற்றி)
வேதவிதுஷே நம: முகானி பூஜயாமி (முகம்)
த்ரிலோக குரவே நம: சி’ராம்ஸி பூஜயாமி (தலை)
பஸ்மோத்தூளித
விக்ரஹாய நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி (முழுவதும்)
ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய அஷ்டோத்தரச ’த நாமாவளி:
(புஷ்பம் அக்ஷதையால் அர்ச்சனை செய்யவும்.)
ஓம் ஸ்கந்தாய நம:
ஓம் குஹாய நம:
ஓம் ஷண்முகாய நம:
ஓம் பாலநேத்ர ஸுதாய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் பிங்களாய நம:
ஓம் க்ருத்திகா ஸூனவே நம:
ஓம் சி’கி வாஹனாய நம:
ஓம் த்விஷட்புஜாய நம:
ஓம் த்விஷண்ணேத்ராய(10) நம:
ஓம் ச ’க்திதராய நம:
ஓம் பிசி’தாச ’ப்ரபஞ்ஜனாய நம:
ஓம் தாரகாஸுர ஸம்ஹாரிணே நம:
ஓம் ரக்ஷோபல விமர்த்தனாய நம:
ஓம் மத்தாய நம:
ஓம் ப்ரமத்தாய நம:
ஓம் உன்மத்தாய நம:
ஓம் ஸுரஸைன்ய ஸுரக்ஷகாய நம:
ஓம் தேவஸேனாபதயே நம:
ஓம் ப்ராஜ்ஞாய (20) நம:
ஓம் க்ருபாளவே நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் உமாஸுதாய நம:
ஓம் ச ’க்திதராய நம:
ஓம் குமாராய நம:
ஓம் க்ரௌஞ்ச தாரணாய நம:
ஓம் ஸேனான்யே நம:
ஓம் அக்னிஜன்மனே நம:
ஓம் விசா’காய நம:
ஓம் ச ’ங்கராத்மஜாய (30) நம:
ஓம் சி’வஸ்வாமினே நம:
ஓம் கணஸ்வாமினே நம:
ஓம் ஸர்வஸ்வாமினே நம:
ஓம் ஸனாதனாய நம:
ஓம் அனந்தச ’க்தயே நம:
ஓம் அக்ஷோப்யாய நம:
ஓம் பார்வதீப்ரியநந்தனாய நம:
ஓம் கங்காஸுதாய நம:
ஓம் ச ’ரோத்பூதாய நம:
ஓம் ஆஹூதாய (40) நம:
ஓம் பாவகாத்மஜாய நம:
ஓம் ஜ்ரும்பாய நம:
ஓம் ப்ரஜ்ரும்பாய நம:
ஓம் உஜ்ரும்பாய நம:
ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நம:
ஓம் ஏகவர்ணாய நம:
ஓம் த்விவர்ணாய நம:
ஓம் த்ரிவர்ணாய நம:
ஓம் ஸுமனோஹராய நம:
ஓம் சதுர்வர்ணாய (50) நம:
ஓம் பஞ்சவர்ணாய நம:
ஓம் ப்ரஜாபதயே நம:
ஓம் அஹஸ்பதயே நம:
ஓம் அக்னிகர்ப்பாய நம:
ஓம் ச ’மீகர்ப்பாய நம:
ஓம் விச் ’வரேதஸே நம:
ஓம் ஸுராரிக்னே நம:
ஓம் ஹரித்வர்ணாய நம:
ஓம் சு’பகராய நம:
ஓம் வடவே (60) நம:
ஓம் வடுவேஷப்ருதே நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் கபஸ்தயே நம:
ஓம் கஹனாய நம:
ஓம் சந்த்ரவர்ணாய நம:
ஓம் கலாதராய நம:
ஓம் மாயாதராய நம:
ஓம் மஹாமாயினே நம:
ஓம் கைவல்யாய நம:
ஓம் ச ’ங்கராத்மஜாய (70) நம:
ஓம் விச்’வயோனயே நம:
ஓம் அமேயாத்மனே நம:
ஓம் தேஜோநிதயே நம:
ஓம் அனாமயாய நம:
ஓம் பரமேஷ்ட்டினே நம:
ஓம் பரப்ரஹ்மணே நம:
ஓம் வேதகர்ப்பாய நம:
ஓம் விராட்ஸுதாய நம:
ஓம் புளிந்தகன்யாபர்த்ரே நம:
ஓம் மஹாஸாரஸ்வதா ப்ரதாய(80)நம:
ஓம் ஆச்’ரிதாகிலதாத்ரே நம:
ஓம் ரோகக்னாய நம:
ஓம் ரோகநாச ’னாய நம:
ஓம் அனந்தாமூர்த்தயே நம:
ஓம் ஆனந்தாய நம:
ஓம் சி’கண்டிக்ருதகேதனாய நம:
ஓம் டம்பாய நம:
ஓம் பரமடம்பாய நம:
ஓம் மஹாடம்பாய நம:
ஓம் வ்ருஷாகபயே (90) நம:
ஓம் காரணோத்பத்தி தேஹாய நம:
ஓம் காரணதீதவிக்ரஹாய நம:
ஓம் அநீச்’வராய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் ப்ராணாய நம:
ஓம் ப்ராணாயாம பராயணாய நம:
ஓம் விருத்தஹந்த்ரே நம:
ஓம் வீரக்னாய நம:
ஓம் ரக்தச்’யாமகளாய நம:
ஓம் ஸுப்ரஹ்மண்யாய (100) நம:
ஓம் மஹதே நம:
ஓம் குஹாய நம:
ஓம் ப்ரீதாய நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் வம்ச ’வ்ருத்திகராய நம:
ஓம் வேதவேத்யாய நம:
ஓம் அக்ஷய பலப்ரதாய நம:
ஓம் ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நம:
நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
உத்தராங்க பூஜை
தசா’ங்கம் குக்குலூபேதம் ஸுகந்தம் ச மனோஹரம்
உமாஸுத நமஸ்துப்யம் க்ருஹாண வரதோ பவ
ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நம: தூபமாக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)
ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னிநா யோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் ஈச ’புத்ர நமோஸ்துதே
ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நம: தீபம் தர்ச ’யாமி
(தீபம் காட்டவும்)
தூபதீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
நைவேத்ய மந்திரங்கள்
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)
ஓம் பூர்புவஸ்ஸுவ
(உத்தரணியில்
தீர்த்தம் எடுத்து மேற்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய
தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)
தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி,
தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)
தேவஸவித: ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(தீர்த்தத்தை நைவேத்ய தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)
அம்ருதமஸ்து, அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
(பிறகு
கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு
படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம்
பண்ணவும்.)
ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா,
ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,
(கீழே குறிப்பிட்ட நைவேத்யங்களின் பெயரை சொல்லி நிவேதனம் செய்யவும்.)
சா’ல்யன்னம், க்ருதகுள பாயஸம், மாஷாபூபம்,
குளாபூபம், நாரிகேள கண்ட த்வயம், கதலீபலம்,
மஹா நைவேத்யம் நிவேதயாமி.
மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
நைவேத்யானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்)
அம்ருதாபிதானமஸி உத்தராசபோச ’னம் ஸமர்ப்பயாமி.
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர் யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின்மேல் தீர்த்தத்தை தெளித்து, நைவேத்யம் செய்யவும்.)
நீராஜனம் ஸமானீதம் கர்ப்பூரேண ஸமந்விதம்
துப்யம் தாஸ்யாமி தேவேச ’ க்ருஹாண வரதோ பவ
ஸ்ரீ வல்லீ தேவஸேனா ஸமேத ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நம:
கர்ப்பூர நீராஜனம் தர்ச ’யாமி
(கற்பூரம் காட்டவும்)
நீராஜநாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
ஸர்வபாபௌக வித்வம்ஸ ஸாக்ஷாத் தர்மஸ்வரூபக
புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி போகிராட் புவனேச் ’வர
ஸ்ரீவல்லீ தேவஸேனா ஸமேத ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நம:
புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி
யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான்
பசு’மான் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசு’மான் பவதி
ஸ்ரீவல்லீ தேவஸேனாஸமேத ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நம:
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி, ஸ்வர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் போடவும்)
யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி ப்ரணச்’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரௌஞ்சசை ’ல விமர்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே சி ’வாத்மஜம்
தாரகாஸுர ஹந்தாரம் மயூராஸன ஸம்ஸ்த்திதம்
ச ’க்திபாணிம் ச தேவேச ’ம் ஸ்கந்தம் வந்தே சி’வாத்மஜம்
ஸ்ரீவல்லீ தேவஸேனா ஸமேத ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நம:
அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி.
ராஜோபசாரங்கள்
(கீழ்க்கண்ட உபசாரங்களைச் சொல்லி புஷ்பம் அக்ஷதைகளை போடவும்.)
சாமரம் வீஜயாமி (சாமரம் விசிறவும்)
வ்யஜனேன வீஜயாமி, (விசிறியால் விசிறவும்)
கீதம் ச்’ராவயாமி (கீர்த்தனை பாடவும்)
ந்ருத்தம் தர்ச ’யாமி (நர்த்தனம் செய்யவும்)
வாத்யம் கோஷயாமி (வீணை, பிடில், மிருதங்கம் போன்ற வாத்தியங்கள் வாசிக்கலாம்.)
ஸமஸ்த ராஜோபசார பூஜான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை சேர்க்கவும்)
அர்க்யம்
(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)
அத்ய பூர்வோக்த, ஏவங்குண, விசே ’ஷண
விசி’ஷ்டாயாம், அஸ்யாம் ஷஷ்ட்யாம் சு’பதிதௌ, ஸ்ரீ
பரமேச் ’வர ப்ரீத்யர்த்தம், ஸ்ரீ வல்லீ தேவஸேனா
ஸமேத ஸுப்ரஹ்மண்ய பூஜாபல ஸம்பூர்ணதா
ஸித்யர்த்தம், க்ஷீரார்க்ய ப்ரதானம், உபாயனதானஞ் ச கரிஷ்யே
(என்று ஸங்கல்பம் செய்து, பாலில் ஜலம் கலந்து கீழ்க்கண்டபடி அர்க்யம் விடவும்.)
ஸ்ரீமத்வல்லீ ஸமாயுக்த தேவஸேனா மனோஹர
கருணாரஸ ஸம்பூர்ண ப்ரஸன்னார்க்யம் ப்ரக்ருஹ்யத...
ஸ்ரீவல்லீ தேவஸேனா ஸமேத ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நம:
இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் (3 தடவை)
கார்த்திகேய மஹா பாஹோ காமிதார்த்த ப்ரதாயக
பக்தபாலன தேவேச ’ ப்ரஸன்னார்க்யம் ப்ரக்ருஹ்யதாம்
ஸ்ரீவல்லீ தேவஸேனாஸமேத ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நம:
இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் (3 தடவை)
பரப்ரஹ்ம ஸதானந்த பாபாரண்ய தவாநல
ஸுப்ரஹ்மண்ய ஸுகானன்த ப்ரஸன்னார்க்யம்
ப்ரக்ருஹ்யதாம்
ஸ்ரீவல்லீ தேவஸேனாஸமேத ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நம:
இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம், (3 தடவை)
அனேன அர்க்யப்ரதானேன ஸ்ரீஸுப்ரஹ்மண்ய: ப்ரீயாதாம்
உபாயனதானம்
சாஸ்திரிகள்
அல்லது வீட்டில் உள்ள பெரியவருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி தானம்
கொடுத்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.
ஸ்ரீவல்லீ தேவஸேனா ஸமேத ஸ்ரீஸுப்ரஹ்மண்ய ஸ்வரூபஸ்ய
ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம் ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்
(தாம்பூலம், தக்ஷிணை, நிவேதனம் செய்த பழங்கள், பதார்த்தங்களில் சிறிதளவு எடுத்து கீழ்க்கண்ட மந்த்ரங்களை சொல்லித் தரவும்.)
ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ:
அனந்த புண்ய பலதம் அத: சா ’ந்திம் ப்ரயச்ச மே
இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம், ஸதாம்பூலம், ஸ்ரீ வல்லீ
தேவஸேனா ஸமேத ஸ்ரீஸுப்ரஹ்மண்ய ப்ரீதிம்,
ஸ்ரீஸுப்ரஹ்மண்ய பூஜாபல ஸாத்குண்யம் ச
காமயமான: துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம
அனயா பூஜயா ஸ்ரீவல்லீ தேவஸேனா ஸமேத
ஸ்ரீஸுப்ரஹ்மண்யேச் ’வர: ஸுப்ரீத: ஸுப்ரஸன்னே
வரதோ பவது
புனர் பூஜை / யதாஸ்த்தானம்
பிறகு,
அன்று மாலை அஷ்டோத்திரம் ஜபித்து, தூப, தீபம் காட்டி பழம், பால் நைவேத்யம்
செய்து, “ஸ்ரீவல்லீ தேவஸேனா ஸமேத ஸ்ரீஸுப்ரஹ் மண்யேச்’வரம், யதாஸ்த்தானம்
ப்ரதிஷ்டாபயாமி, சோ’ பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச என்று சொல்லி புஷ்பம்,
அக்ஷதையை ஸ்வாமியிடம் சேர்த்து வடக்கு முகமாக நகர்த்தி வைக்கவும்.