Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூஜை மஹிமை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 21. இந்த்ர பூஜையும் கோ பூஜையும்
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
05:11

ஸங்கல்பம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.) மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹுர்த்÷ த, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச் ’வே, ச ’காப்தே, அஸ்மிந் வர்த்த மானே, வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்ட்யா: ஸம்வத்ஸரா ணாம் மத்யே, *.... நாம ஸம்வத்ஸரே, *.... அயனே, *...ருதௌ, *...மாஸே, *...பக்ஷே, *.... சு’பதிதௌ, *..... வாஸர யுக்தாயாம், *.....நக்ஷத்ர யுக்தாயாம் ச, ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம்  சு’பதிதௌ.

அஸ்மாகம் ஸஹகுடும்பானாம் க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச் ’வர்யாபிவ்ருத்யர்த்தம், ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம், இந்த்ராணீ ஸமேத இந்த்ர ப்ரீத்யர்த்தம் இந்த்ர பூஜாம்  கோ  பூஜாம் ச கரிஷ்யே ததங்கம் கலச ’ பூஜாம் ச கரிஷ்யே (என்று கூறி அக்ஷதையை வடக்குப் பார்க்கமாகப் போட்டு, தீர்த்தம் தொடரவும்.) *பஞ்சாங்கம் பார்க்கவும்.

விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன............உபாஸ்மஹே (பக்கம் 32)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

தியானமும், ஆவாஹனமும்

ஐராவதகஜாரூடம் ஸஹஸ்ராக்ஷம்  சு’சீபதம்
வஜ்ராயுததரம் தேவம் ஸர்வலோக மஹீபதிம்

இந்த்ராண்யா ச ஸமாயுக்தம் வஜ்ரபாணிம் ஜகத்ப்ரபும்
இந்த்ரம் த்யாயேத் து தேவேச ’ம் ஸர்வமங்கள ஸித்தயே

ஓம், அஸ்மின் கோமய பிம்பே / பிம்பே/ சித்ரபடே
இந்த்ராணீ ஸமேதம் இந்த்ரம் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

இந்த்ராணீ ஸமேதம் இந்த்ரம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஸமஸ்த உபசார பூஜைகள்

இந்த்ராய நம: ரத்னஸிம்ஹாஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஐராவத கஜாரூடாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

வஜ்ரபாணயே நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ச ’தீபதயே  நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸஹஸ்ராக்ஷாய நம: ஸ்நாபயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

ஸ்நானானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸர்வலோக மஹீபதயே நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

தேவேசா ’ய நம: உபவீதார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

இந்த்ராணீ ஸமேதாய இந்த்ராய நம:
ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(ஆபரணங்களுக்கு பதிலாக அக்ஷதை போடவும்)

ஜகத் ப்ரபவே நம: கந்தான் தாரயாமி
கந்தோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(சந்தனம், குங்குமம் இடவும்)

அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

இந்த்ராய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அர்ச்சனை

ஓம் இந்த்ராய        நம:
ஓம் மஹேந்த்ராய    நம:
ஓம் தேவேந்த்ராய    நம:
ஓம் ஸ்வர்ணாலகாய    நம:
ஓம் ஸஹஸ்ரநேத்ராய    நம:
ஓம் சு’பதாய        நம:
ஓம் வ்ருத்ராரயே        நம:
ஓம் பாகசா’ஸநாய    நம:
ஓம் ஐராவத கஜாரூடாய    நம:
ஓம் பிடௌஜஸே    நம:
ஓம் ச ’த மகாய        நம:
ஓம் புரந்தராய        நம:
ஓம் த்ரிலோகேசா ’ய    நம:
ஓம் ச ’சீபதயே        நம:

இந்த்ராணீ ஸமேதாய இந்த்ராய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் போடவும்)

இந்த்ராணீ ஸமேதாய இந்த்ராய நம:
தூபமாக்ரபயாமி, தீபம் தர்ச ’யாமி
(தூபம், தீபம் காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய
தீமஹி/ தியோ யோ ந: ப்ரசோதயாத்/
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ/ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதமஸ்து /அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா ’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது. போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

இந்த்ராணீ ஸமேதாய இந்த்ராய நம:
மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி
(நைவேத்யம் செய்யவும்)

இந்த்ராணீ ஸமேதாய இந்த்ராய நம:
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தில் தீர்த்தம் விடவும்)

இந்த்ராணீ ஸமேதாய இந்த்ராய நம:
கர்ப்பூர நீராஜனம் தர்ச ’யாமி
(கற்பூர தீபம் காட்டவும்.)

இந்த்ராணீ ஸமேதாய இந்த்ராய நம:,
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

இந்த்ராணீ ஸமேதாய இந்த்ராய நம:, அனந்தகோடி
ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
(நமஸ்காரம் செய்யவும்)

ஹே தேவ காம் ரக்ஷ, மாம் ரக்ஷ, மம குடும்பம் ச ரக்ஷ
என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும்.

கோ பூஜை

காமதேனோ: ஸமுத்பூதே ஸர்வகாம பலப்ரதே
த்யாயாமி ஸௌரபேயி த்வாம் வ்ருஷ பத்னி நமோஸ்துதே
காம் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஆவாஹயாமி தேவேசி ’ ஹவ்ய கவ்ய பலப்ரதே
வ்ருஷ பத்னி நமஸ்துப்யம் ஸுப்ரீதா வரதா பவ
காம் ஆவாஹயாமி  (புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

காமதேனவே நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

பயஸ்வின்யை நம: பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஹவ்யகவ்ய பலப்ரதாயை நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

கவே நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸௌரப்ய்யை நம: ஸ்நபயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் எடுத்து தெளிக்கவும்.)

க்ஷீரதாரிண்யை நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

மஹாலக்ஷ்ம்யை நம: ஆபரணம் ஸமர்ப்பயாமி
(ஆபரணம் அணிவிக்கவும்)

ரோஹிண்யை நம: கந்தான் தாரயாமி.
(சந்தனம் வைக்கவும்)

கந்தோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமம் வைக்கவும்)

அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ச்’ருங்கிண்யை நம: புஷ்பை: பூஜயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அர்ச்சனை

ஓம் காமதேனவே    நம:
ஓம் பயஸ்வின்யை    நம:
ஓம் ஹவ்யகவ்ய பலப்ரதாயை    நம:
ஓம் வ்ருஷப பத்ன்யை    நம:
ஓம் ஸௌரபேய்யை    நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை    நம:
ஓம் ரோஹிண்யை    நம:
ஓம் ச் ’ருங்கிண்யை    நம:
ஓம் க்ஷீரதாரிண்யை    நம:
ஓம் கம்போஜஜனகாயை    நம:
ஓம் பப்லஜகாயை    நம:
ஓம் யவனஜனகாயை    நம:
ஓம் மாஹேய்யை    நம:
ஓம் நைசிக்யை        நம:
ஓம் ச ’பள்யை         நம:
நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

உத்தராங்க பூஜை

தசா’ங்கம் குக்குலோ பேதம் ஸுகந்தம் ச ஸுமநோஹரம்
தூபம் தாஸ்யாமி தேவேசி’ வ்ருஷபபத்ந்யை
நமோஸ்துதே தூபமாக்ராபயாமி (தூபம் காட்டவும்)

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸாஜ்யம் த்ரிவர்தி ஸம்யுக்தம் வஹ்னினாயோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் த்ரைலோக்ய திமிராபஹம்

ஜயந்த ஜனகாய நம: கம்போஜ ஜனகாயை நம:
தீபம் தர்ச ’யாமி (தீபம் காட்டவும்.)

தீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய
தீமஹி /தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ /ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதமஸ்து /அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா ’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

திவ்யான்னம் பாயஸாதீனி சா ’கஸூப யுதானி ச
ஷட்ரஸாதீனி மாஹேயி காமதேன்வை நமோஸ்துதே

மஹேந்த்ராய நம: மாஹேய்யை நம: திவ்யான்னம், க்ருதகுள
பாயஸம், நாளிகேர கண்டத்வயம், கதலீபலம், சா ’கஸூப
ஸஹிதம் ஸர்வம் அம்ருதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி.
(நைவேத்தியம் செய்யவும்.)

நிவேதனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஏலாலவங்க கற்பூர நாகவல்லீ தளைர்யுதம்
பூகீபல ஸமாயுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
காச் ’யபேயாய நம: ஸௌரப்யை நம:
கற்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலம் நிவேதனம் செய்யவும்)

நீராஜனம் க்ருஹாணேதம் கற்பூரை: கலிதம் மயா
காமதேனு ஸமுத்பூதே ஸர்வாபீஷ்ட பலப்ரதே
கற்பூர நீராஜனம் தர்ச ’யாமி
(கற்பூர தீபம் காட்டவும்.)

நீராஜனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

யோபாம் புஷ்பம் வேத /புஷ்பவான் ப்ரஜாவான் பசு’மான்
பவதி / சந்த்ரமாவா அபாம் புஷ்பம் /புஷ்பவான் ப்ரஜாவான்
பசு ’மான் பவதி

இந்த்ராய நம: வ்ருஷப பத்ந்யை நம:
வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி வினச்’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

ப்ரக்ருஷ்ட பாபநாசா’ய ப்ரக்ருஷ்ட பலஸித்தயே
ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ப்ரஸீத க்ஷீரதாரிணி

ஜயந்த ஜனகோ தேவ: ஸஹஸ்ராக்ஷ: புரந்தர:
புலோமஜாபதிர் ஜிஷ்ணு: தஸ்மை நித்யம் நமோ நம:

இந்த்ராணீ பதயே நம: வ்ருஷபபத்ன்யை நம: அனந்தகோடி
ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி.
(நமஸ்காரம் செய்யவும்.)

சத்ரசாமராதி ஸமஸ்த தேவோபசாரான் ஸமர்ப்பயாமி.
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்.)

அர்க்ய ப்ரதானம்

(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)

யஸ்ய ஸ்ம்ருத்யா ச நமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு
ந்யூனம் ஸம்பூர்ணதாம்யா தம் வந்தே பாகசா ’ஸனம்

மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம்  ச ’சீபதே
யத் பூஜிதம் மயா பக்த்யா பரிபூர்ணம் ததஸ்துதே

மயா க்ருதயா பூஜயா பகவான் ஸர்வாத்மக:
கோதேவதா ப்ரீயதாம்/ (அர்க்யம் விடவும்.)

(என்று சொல்லி புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக் கொண்டு, பாலால் அர்க்யம் விடவும்.) ‘ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து’.

உபாயன தானம்

(பூஜை செய்வித்த சாஸ்திரிகளுக்கு, அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)

இந்த்ர ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்
ஸகலாராதனை: ஸ்வர்சிதம்//
(ஆஸனத்தில் அமரச்செய்து, சந்தனம் கொடுத்து, அக்ஷதை சேர்க்கவும்.)

ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ:
அனந்த புண்ய பலதம் அதச்’ சா’ந்திம் ப்ரயச்சமே
மயாக்ருத தேவேந்த்ர பூஜா, கோ பூஜா, ஸாத்குண்யார்த்தம்,
யத்கிஞ்சித் ஹிரண்யம் ஸதக்ஷிணாகம், ஸ தாம்பூலம்,
தேவேந்த்ர ப்ரீதிம், கோ ப்ரீதம் ச காமயமான:
துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம.

(என்று சொல்லி அவருக்கு வெற்றிலை பாக்கு, பழங்கள் வைத்து தக்ஷிணையும் வைத்து மேற்கண்ட ஸ்லோகம் சொல்லி தானமாக கொடுக்க வேண்டும். பிறகு கோமாதாவிற்கு வீட்டில் செய்த ப்ரஸா தங்களை ஒரு வாழை இலையில் படைக்க வேண்டும்.)

புனர் பூஜை / யதாஸ்தானம்

பூஜை அன்று சாயங்காலம் ஸூர்ய அஸ்தமனத்தின் போது அஷ்டோத்தரம் ஜபித்து, தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து தூப தீபம் கற்பூரம் காட்டி, “இந்த்ராணீ ஸமேதம் இந்த்ரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி // சோ’ பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச//” என்று கூறி அக்ஷதைச் சேர்த்து, வடக்கு முகமாக நகர்த்தி வைக்கவும்.

பலன்: குரு அருளும், மகாலக்ஷ்மி அருளும் மற்றும் சகல விதமான ஐஸ்வரியங்களும், ஆரோக்கியமும் பெருகும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 21. இந்த்ர பூஜையும் கோ பூஜையும் »

பூஜை மஹிமை நவம்பர் 01,2018

தேவாஸுரர்கள் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்த பொழுது அதிலிருந்து தோன்றியவள் தான் காமதேனு. அவளுடைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar