ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதையொட்டி இன்று இரவு 7 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வாஸ்து சாந்தி பூஜை, நாளை காலை 10 மணிக்கு நந்திதேவர் மண்டபத்திலுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றி சிவராத்திரி விழா துவங்கிறது. முதல் நாள் இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதிஉலா, முக்கிய நிகழ்ச்சியான பிப்.,20ல், மகா சிவராத்திரி தேரோட்டம், இரவில் வெள்ளி ரதம், பிப்.,21 ல் அமாவாசை தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. விழா நாட்களில் காலையில் பர்வதவர்த்தனி அம்பாள் தங்க கேடயத்தில் வீதிஉலா, இரவில் சுவாமி, அம்பாள் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடக்கிறது. தினமும் மாலையில் கோயில் வடக்கு நந்தவனக் கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.