பதிவு செய்த நாள்
03
நவ
2018
12:11
சென்னிமலை: சென்னிமலையில், காங்கேயம் பிரதான சாலையில், மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம், பொங்கல் விழா நடக்கிறது. நடப்பாண்டு விழா, கடந்த மாதம், 24ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 31ல் கம்பம் நடப்பட்டது. இதை யடுத்து தினமும், சிறப்பு பூஜை நடந்து வருகிறது. கம்பத்துக்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபடுகின்றனர். வரும், 7ல் மாவிளக்கு ஊர்வலம், சிறப்பு பூஜை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம், 8ல் நடக்கிறது. அன்று காலை முதல் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் மக்கள் வழிபடுவர். 9ல் மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார், பூசாரி வாசுதேவன் தலைமையில் பணியாளர் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.