பதிவு செய்த நாள்
06
நவ
2018
02:11
கோல்கட்டா, கேரள மாநிலம் சபரிமலையில், 10 - 50 வயதுள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுபோல், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள காளி கோவிலில், தசரா விழாவின்போது, பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.தசரா பூஜைமேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல், காங்., அரசு அமைந்துள்ளது.
இங்குள்ள பிர்பும் மாவட்டத்தில் உள்ள தாராபீட் எனப்படும், காளி கோவில் அமைந்துள்ளது. இங்கு தசரா பூஜையின்போது, சிறப்பு பந்தல் அமைக்கப்பட்டு பூஜைகள் நடப்பது வழக்கம்.கடந்த, 34 ஆண்டுகளாக, இந்த பூஜையின் போது, பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. விழாக் குழுவில் பெண்கள் இடம் பெற்றிருந்தாலும், பூஜை நடக்கும் பந்தலுக்குள், பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அசம்பாவிதம்பெண்களை அனுமதித்தால், உள்ளூரில் ஏதாவது பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு விடுகிறது. அதனால், பெண்களை அனுமதிப்பதில்லை. 34 ஆண்டுகளாக, இதை வழக்கமாக வைத்துள்ளோம் என, விழா குழுவினர் கூறி உள்ளனர்.