பதிவு செய்த நாள்
07
நவ
2018
01:11
சேலம்: சேலம் கோவில்களில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று நடந்த சிறப்பு பூஜைகளில் திரளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. சேலம், எல்லைப்பிடாரி அம்மன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில்களில் அம்மன் முத்தங்கி அலங்காரத்திலும், ராஜகணபதி கோவிலில் உள்ள விநாயகர் வெள்ளி கவசத்திலும், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன், தங்க கவசத்திலும் அருள் பாலித்தார். சேலம், செவ்வாய்பேட்டை, அக்ரஹாரம் ஸ்ரீ ஹரிஹர கோவிலில், சிவன் தங்க கவசத்தில் அருள் பாலித்தார். இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவில், உத்தமசோழபுரம் கைலாசநாதர் கோவில், ஊத்துமலை முருகன் கோவில் உட்பட, சிவன், பெருமாள், முருகன், அம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு அலங்கார பூஜைகளில் திரளாக பக்தர்கள் வழிபட்டனர்.