சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவிலில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சென்னிமலை, முருகன் கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை ஏராளமான பக்தர்கள் வருகை தருவதுண்டு. நேற்று செவ்வாய்கிழமை நாளில், தீபாவளி பண்டிகையும் ஒருங்கிணைந்து வந்ததால், சென்னிமலை முருகன் கோவிலில் காலை, 4:30 மணி முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. காலையில் நடந்த கோ-பூஜையை பக்தர்கள் பார்க்க அதிகளவில் வந்திருந்தனர். 6:40 மணிக்கு நடந்த அபி ?ஷகம் நடந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், கோவில் பஸ் இரண்டும் இயக்கப்பட்டது. பொது தரிசனத்தில் பக்தர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 11:00 மணிக்கு கூட்டம் மிக அதிகமாக இருந்தால், வாகன நெரிசல் ஏற்பட்டதால், தனியார் கார்களை, மலை கோவிலின் மேல் அனுமதிக்கவில்லை. கார்களில் வந்த பக்தர்கள், அடிவாரத்தில் நிறுத்தி விட்டு கோவில் பஸ்சில் பயணம் செய்தனர்.