பரமக்குடி, பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஸஷ்டி விழா இன்று (நவம். 8ல்) துவங்கவுள்ளது.இரவு 8:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டப்படும்.
தினமும் இரவு 8:00 மணிக்கு மூலவர், உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். நவ., 13 மாலை 4:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சக்தி வேலுடன் மயில் வாகனத்தில் வீதிவலம் வருவார்.தொடர்ந்து கோயில் முன்பு வைகை ஆற்றின்கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
மறுநாள் காலை 11:00 முதல் மதியம் 12:00 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருக்கல்யாணம், இரவு வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் செய்து வருகின்றனர். இதே போல் பாரதிநகர், பால்பண்ணை முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா நடக்கிறது.