பதிவு செய்த நாள்
09
நவ
2018
02:11
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி சூரசம்ஹார விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நேற்று (நவம்., 8ல்) துவங்கியது.பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி சூரசம்ஹார விழா, நேற்று (நவம்., 8ல்) துவங்கியது.
விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.அதில், விரதமிருக்கும் பக்தர்கள் ஆர்வமாக கையில் காப்பு கயிறு கட்டிக்கொண்டனர். பின்னர், வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசித்தனர்.
விழாவையொட்டி, நேற்று 8ம் தேதி முதல், 14ம் தேதி வரை நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. வரும், 12ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும், 13ம் தேதி மாலை, 4:00 மணி முதல், சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது.வரும், 14ம் தேதி காலை, 10:00 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும்; 15ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்வச பூர்த்தியும் நடக்கின்றன.
தண்டு விரதம்சூரசம்ஹார விழாவையொட்டி, காப்பு கட்டும் ஆண்கள், பெண்கள் வரும், 13ம் தேதி வரை, அன்ன ஆதாரமின்றி, தண்டு விரதம் இருப்பர். சூரசம்ஹாரம் முடிந்ததும், வாழைத்தண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், ஆப்பிள் போன்ற பழங்கள்; தயிர், கருவேப்பிலை, கொத்துமல்லி முதலியவை கொண்டு பிரசாதம் தயாரித்து, சுப்பிரமணியசுவாமிக்கு படைத்து விரதம் முடிப்பர். இந்த தண்டு விரதம் பொள்ளாச்சி கோவிலில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.