இடைப்பாடி: இடைப்பாடியில் உள்ள அம்மன் கோவில்களில் நடந்த திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இடைப்பாடியில், சின்னமாரியம்மன் கோவில் உள்ளது.
ஆண்டுதோறும், ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த மாதம், 30ல் கம்பம் நட்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான, சுவாமி ஊர்வலம் நேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. சின்னமாரியம்மன், தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல், இடைப்பாடி அருகே குஞ்சாம்பாளையத்தில் உள்ள, நாச்சம்பட்டி பெரியமாரியம் மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 23ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பொங்கல் திருவிழா நேற்று (நவம்., 8ல்) நடந்தது. பெரியமாரியம்மன், தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.