பதிவு செய்த நாள்
09
நவ
2018
03:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, வரும், 14ல் துவங்குகிறது. 23ல் காலை, 4:00 மணிக்கு, பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகின்றன. கோவிலில், நூற்றுக்கணக்கான பரிவாகன தேவதைகள், மூர்த்தி சிலைகள் உள்ளன. விசேஷ நாட்களில், இந்த சிலைகளுக்கு, வெள்ளி கவசங்கள் அணிவிக்கப்படும். தீபத்திருவிழாவை முன்னிட்டு, விழா நடக்கும் நாட்களில், சிலைகளுக்கு வெள்ளிக் கவசங்கள் அணிவிக்கப்படுகின்றன. இதையொட்டி, கவசங்களுக்கு, பாலீஸ் போடும் பணிகள் நேற்று துவங்கின. இன்னும், ஒரு வாரத்தில் இந்த பணிகள் முடிவடையும் என கோவில் அதிகாரிகள் கூறினர்.