பதிவு செய்த நாள்
10
நவ
2018
11:11
வல்லக்கோட்டை: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்தசஷ்டி விழாவின் இரண்டாம் நாளான நேற்று பச்சை சாற்றி அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை கிராமத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மூலவருக்கு, மூன்று கால மஹா அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று பச்சை சாற்றி அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 13ல், சூரசம்ஹாரமும், 14ம் தேதி, தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.இதே போல், செங்கல்பட்டு காட்டுநாயக்கன் தெருவில், செம்மலை வேல்முருகன் கோவிலில், 28ம் ஆண்டு கந்த சஷ்டி விழா, நேற்று முதல் துவங்கியுள்ளது.