உடுமலை: பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவிலில், ரிஷப வாகனத்தில் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது.மடத்துக்குளம் ஒன்றியம் பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி விழா, நடக்கிறது. நேற்று, காலையில்,ஹாேமம், மாலையில் ஞானதண்டாயுதபாணி சுவாமிகளுக்கு ராஜ அலங்காரம் நடந்தது. மாலையில் கந்த புராண நிகழ்ச்சி நடந் தது. தொடர்ந்து, ரிஷப வாகனத்தில்சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலிலும், கந்த சஷ்டி சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தன.