பதிவு செய்த நாள்
10
நவ
2018
02:11
மல்லசமுத்திரம்: வையப்பமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும், 13ல் கந்தசஷ்டி விழா நடக்கவுள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை குன்றின் மீது இருக்கும் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி கோவிலில், வரும், 13ல் கந்தசஷ்டி விழா நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, கடந்த, 8 முதல், வரும், 12 வரை தினமும் காலை, 10:00 மணிக்கு அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்; 13 காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் மலையை சுற்றி பால்குடம் எடுத்து வருதலும் நடக்கவுள்ளது. தொடர்ந்து, சிறப்பு அர்ச்சனை நடக்கும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.