பதிவு செய்த நாள்
10
நவ
2018
02:11
தியாகதுருகம்:ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத் துடன் துவங்கியது.
ரிஷிவந்தியத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு நேற்று முன்தினம் (நவம்., 8ல்) கந்த சஷ்டி விழா துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மலர் அலங்காரமும் செய்யப் பட்டது.சன்னதி முன்புறம் யாகசாலை அமைத்து பூஜைகள் நடந்தது. வேத மந்திரங்கள் ஓத நவ வீரர்கள் காப்பு கட்டுதலும் அதைத்தொடர்ந்து கொடியேற்றி திருவிழா துவக்கி வைக்கப் பட்டது. உற்சவர் மூர்த்தி சர்வ அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. வரும் 12ம் தேதி கம்பம் ஏறும் நிகழ்ச்சியும், அடுத்த நாள் 13ம் தேதி சூரசம்ஹார திருவிழாவும், 14 ம் தேதி திருக்கல் யாண வைபவமும், 15ம் தேதி இடும்பன் பூஜையும் நடக்கிறது.
* மயிலம்: வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் (நவம்., 8ல்) துவங்கியது. அதனையொட்டி அன்று காலை 6:00 மணிக்கு மூலவ ருக்கு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் தங்க கவச அங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இரவு 7.00 மணிக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு கூட்டு வழிபாடு செய்தனர். வரும் 13ம் தேதி இரவு 8:00 மணிக்கு சூரசம்கார நிகழ்ச்சி நடக்கிறது.
* கண்டாச்சிபுரம்: ராமநாதீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி பெருவிழாவின், இரண்டாம் நாளான நேற்று (நவம்., 9ம்) காலை வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி க்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்னையை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் வீரவாகுத் தேவர்கள் வீதியுலாவும், உற்சவ மூர்த்தி வீதியுலா நடைபெற்றது. இரவு சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.
* விக்கிரவாண்டி: புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (நவம்.,8ல்) மாலை 6.30 மணிக்கு கந்த சஷ்டி துவக்கத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து மலர்களால் அலங்கரிக்கப் பட்டு மகா தீப ஆராதனை நடந்தது.