பதிவு செய்த நாள்
13
பிப்
2012
10:02
விழுப்புரம் : விழுப்புரம் சித்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழுப்புரம் ரங்கநாதன்ரோடு சித்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை நவக்கிரக ஹோமங்களும், மாலை நூதன பிம்பங்கள் கண் திறப்பும், கோபூஜையும் நடந்தது. மறுநாள் (10ம் தேதி) கோபுர கலச ஸ்தாபிதமும், முதல் கால யாக பூஜையும் நடந்தது. தொடர்ந்து 11ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 8.30 மணிக்கு சித்திவிநாயகர், பாலசுப்ரமணியர், துர்கை, லட்சுமி, சரஸ்வதி, தட்சணாமூர்த்தி, ஐயப்பன், ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரக சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகமும், தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது.