பெரும் செல்வந்தர் ஒருவர், சிறுவயதில் தான் படித்த பள்ளிக்குச் சென்றார். அவரது பையில் ஒரு தங்கமாலையும், ஒரு புத்தகமும் இருந்தது. அங்கிருந்த மாணவர்களை அழைத்து “நான் இதை உங்களுக்கு தருவதாக இருந்தால் எதைக் கேட்பீர்கள்?” என்றார். ஒரு மாணவன் முந்திக் கொண்டு “தங்க மாலையைத் தான் கேட்பேன்,” என்றான். மற்றொருவன்,“ஐயா.. அறிவே உலகில் உயர்ந்தது. அதையே கேட்பேன்” என்றான். செல்வந்தரும் மகிழ்ச்சியுடன் அதைக் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தான். என்ன ஆச்சரியம்! அதன் ஒவ்வொரு பக்கமும் தங்கத் தகட்டால் செய்யப்பட்டு, அதில் எழுத்துக்கள் .பதிக்கப்பட்டிருந்தன. தங்க மாலையை விட பல மடங்கு எடை கொண்டதாக அந்தப் புத்தகம் இருந்தது. எனவே செல்வத்திற்கு ஆசைப்பட வேண்டாம். நமக்கு என்ன தேவை என்பது ஆண்டவருக்கு தெரியும். அவரே நம் தேவை யறிந்து கொடுப்பார். தகுதியானவற்றுக்கு ஆசைப்படுபவர் களுக்கு ஒன்றுக்கு இரண்டு மடங்காக தரவும் செய்வார்.