* தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்தத் தகுதியானவன். * தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன் கடவுளிடம் நம்பிக்கை வைக்க முடியாது. * நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். எதையும் செய்யும் ஆற்றல் நமக்கு இருக்கிறது. * இந்த பிறவிலேயே கடவுள் தன்மையை அடைவதே வாழ்வின் குறிக்கோள். * கடவுள் நம்மோடு எப்போதும் இரண்டறக் கலந்திருக்கிறார். அவரை விட்டு நாம் விலகுவதில்லை. *தூய்மையானவர்கள், நல்லவர்கள் இந்த பிறவியிலேயே கடவுளைக் காணும் பாக்கியம் பெறுவர். * கடவுளை உணர்ந்த ஞானிகளை உலக நடப்புகள் சிறிதும் பாதிப்பதில்லை. * மனம் நுட்பமாகும் போது ஆன்மிக அறிவுரையின் உண்மை விளங்கும். * சுயநலமின்றி எந்த நேரமும் பணிபுரிபவனே கர்மயோகி. மிகப் பெரிய உண்மை இதுவே... வலிமை தான் வாழ்வு, பலவீனமே மரணம். * பலவீனத்திற்கு பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது மட்டுமே. விளக்கம் தருகிறார் விவேகானந்தர்