பதிவு செய்த நாள்
13
நவ
2018
12:11
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று சூரசம்ஹார விழா நடக்கிறது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா கடந்த, 8ம் தேதி துவங்கியது. முருகப்பெருமானுக்கு தினமும், நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது.
விழாவையொட்டி, நேற்று (நவம்., 12ல்) மாலை, 6:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. இன்று (நவம்., 13ல்) மாலை, 4:00 மணி முதல், சூரசம்ஹாரம் நடக்கிறது. கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், பானுகோபன் மற்றும் சூரபத்மனை முருகப்பெருமான் வதை செய்யும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது.
* கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவில், கரியகாளியம்மன் கோவிலில், வேலாயுத சுவாமி வேல் வாங்கும் உற்சவம் நேற்று நடந்தது.
இன்று (நவம்., 13ல்), மாலை, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது. முத்துக் கவுண்டனூரில் உள்ள முத்துமலை முருகன் கோவில், சூரசம்ஹார விழாவில், இன்று (நவம்.,13ல்) சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. நாளை (நவம்., 14ல்) மாலை, முருகன், வள்ளி, தெய்வாணை திருக்கல்யாணமும் நடக்கிறது.
* வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆறாம் ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் முருகப்பெருமான், சூரனை வதம் செய்யும் முக்கிய நிகழ்வுக்கு, இன்று, 13ம் தேதி எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து சக்திவேல் வாங்கும் உற்சவமும், மாலை, 6:00 மணிக்கு சூரசம்ஹார விழாவும் நடக்கிறது.நாளை, 14ம்தேதி மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. வரும், 15ம் தேதி காலை, 11:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி குழுவினர் செய்து வருகின்றனர்.