பதிவு செய்த நாள்
13
நவ
2018
12:11
சென்னை: அஸ்தினாபுரம், வேல்முருகன் நகரில் உள்ள, வள்ளி - தேவசேனா சமேத வேல் முருகன் கோவிலில், இன்று (நவம்.,13ல்) மாலை, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சென்னை, அஸ்தினாபுரத்தில், வள்ளி - தேவசேனா சமேத வேல்முருகன் கோவிலில், எட்டு ஆண்டுகளாக, சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, கந்த சஷ்டியைத் தொடர்ந்து, ஒன்பதாம் ஆண்டாக, சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இன்று (நவம்., 13ல்) மாலை, 5:00 மணிக்கு, கணபதி பூஜை நடக்க உள்ளது. தொடர்ந்து, 6:30 மணிக்கு, வேல் வாங்குதல் நிகழ்ச்சியும்; 7:00 மணிக்கு, சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடக்க உள்ளன.
நாளை (நவம்., 14ல்) காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள், வள்ளி - தேவசேனா சமேத வேல்முருகனுக்கு, திருக்கல்யாண உற்சவமும்; மாலை, 7:00 மணிக்கு, வீதியுலாவும் நடைபெற உள்ளன.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து உள்ளனர்.