Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் அறவழிப் போராட்டம் ஐயப்ப ... திருவண்ணாமலை முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் திருவண்ணாமலை முருகன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரோகரா கோஷம் விண்ணதிர திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
அரோகரா கோஷம் விண்ணதிர திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

13 நவ
2018
05:11

துாத்துக்குடி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பலலட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார்.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு சஷ்டி விழா, 8ம் தேதி, யாகசாலை பூஜையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது. அதிகாலை, 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதிகாலை, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை மற்றும் மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.


தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன், தங்க சப்பரத்தில் எழுந்தருளி, சண்முகவிலாச மண்டபத்தில் காட்சியளித்தார். மாலை, 4:30 மணிக்கு, கோவில் கடற்கரையில் லட்சணக்கான பக்தர்கள் முன்னிலையில், கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மனாய் அடுத்தடுத்து வலம் வந்து ஆணவத்துடன் போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் தன்னுடையே வேலால் சம்ஹாரம் செய்தார். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமெழுப்பினர். பின்னர், சேவல் உருவத்தில் போரிட்ட சூரனை, சுவாமி தன்னுடைய சேவற்கொடியாகவும், மாமரமாகவும் ஆட்கொண்டார். ஆறு நாள் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, விரதத்தை முடித்தனர். தமிழகம் முழுவதும் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar