Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்சூர் அருகே இரிஞ்ஞாலக்குடா ... அயோத்தியில் ராமர் கோவில் ராமகோபாலன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உச்சநீதிமன்றம் தடை விதிக்காதது ஏமாற்றம் தருகிறது : ஐயப்ப பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2018
02:11

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம், என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீதான மறுசீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது, பக்தர்களுக்கு ஆறுதல் தந்தாலும், முந்தைய தீர்ப்பு மீது இடைக்கால தடை விதிக்காததால் பெண்கள் செல்ல வாய்ப்பு உண்டு.

இது குறித்து ஐயப்ப பக்தர்கள் கருத்து...தமிழக பெண்கள் செல்ல மாட்டார்கள்வி.பி.மணிகண்டன், ஐயப்ப பக்தர், மதுரைகடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சபரிமலை செல்கிறேன். பெண்களுக்கு சம உரிமை தருகிறோம். ஆகையால் தான் இருமுடி கட்டும்போது அரிசி, நெய்யினை பெண்களை நிரப்ப கூறுகிறோம். சபரிமலை ஐயப்பனுக்கென ஒரு ஐதீகம் உண்டு.

அதை பின்பற்ற தான் இளவயது பெண்களை அனுமதிக்க வேண்டாம் எனக்கூறுகிறோம். நீதிமன்றமும் ஐதீகத்தை பின்பற்றும் நோக்கில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல தடை விதிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் பெண்களுக்கு தடையில்லை எனக்கூறியது வேதனை தருகிறது. பெண்கள் வரும் பட்சத்தில் மகரவிளக்கு, மண்டல பூஜை காலங்களில் பக்தர்களுக்கு நிம்மதியற்ற சூழல் ஏற்படும்.வயது 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை, பக்தர்கள் மாளிகைபுரத்தம்மன் என வணங்கி தான் அழைத்து செல்கிறோம்.

ஐயப்பனின் சக்தி தெரிந்த தமிழக பெண்கள் யாரும் வரமாட்டார்கள். ஆனால் வீம்பிற்காக சில அமைப்பினை சேர்ந்த பெண்கள் வருவதாக கூறுவது தான் வேதனை அளிக்கிறது. கேரளா அரசு, தேவசம் போர்டு நிர்வாகமும் பெண்களை அனுமதிப்பதில்லை என முடிவெடுத்தால் தான், பக்தர்கள் நிம்மதியாக சென்றுவர முடியும். பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து காடு, மலையை கடந்து சென்று ஐயப்பனை தரிசிப்பதன் மூலம் நிம்மதி, வளம் பெறுகிறோம்.

ஆனால் வீம்புக்கு பெண்கள் வந்தால் அவற்றை இழக்கும் நிலை பக்தர்களுக்கு நேரிடும். காணிக்கை கொடா இயக்கம் கைலாசநாதன்,குருசாமி, மதுரைஐயப்பனை வழிபட ஆகம விதிகளின்படி பாரம்பரிய நடைமுறை வழக்கத்தில் உள்ளது. அதை மீறுவது ஒரு போதும் கூடாது. இதை மீறுவது பாவச்செயலாகும்.

ஐயப்ப குருசாமிகள் தங்களது சீடர்களுக்கு இருமுடி கட்டும்போது மூன்று உத்திரவாதங்களை ஐயப்பன் முன் நிறுத்தி கட்டாயம் பெற வேண்டும். பெண் சீடர்கள் பத்து வயதுக்கு உட்பட்ட 50 வயதுக்கு மேற்பட்டவரா என்பதை வயது சான்றை ஆராய்ந்து உறுதி செய்ய வேண்டும். அறிந்தும், அறியாமலும் இளம் பெண்கள் சபரிமலை புறப்பட ஆயத்தமாவது தெரிந்தால், ஆன்மிக, அமைதி வழியில் ஐயப்பனின் நாமம், வழிபாட்டு முறைகள் மற்றும் இளம் பெண்களுக்கு இருமுடி கட்டுவது தெய்வக்குற்றமாகும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டு தங்களது முடிவை மாற்றி கொள்ளும் அளவுக்கு புரிதல் உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நமது ஊசியை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவது போல், கேரள கம்யூ., அரசும், தேவசம்போர்டு நிர்வாகிகளும் சபரிமலை கோயில் வருமானத்தை கோயில் வளர்ச்சிப்பணி, சமுதாயப்பணிக்கு செலவிடாமல், ஐயப்ப பக்தர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வீண் செலவு செய்வதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு உண்மையான ஐயப்ப பக்தர்களுக்கு உண்டு. எனவே, சபரிமலை செல்வோர் மேல்சாந்திக்கு காணிக்கை செலுத்த வேண்டும். உண்டியலில் செலுத்தும் தொகையை சேமித்து வைத்து ஐயப்ப சேவா அமைப்புகளுக்கு வழங்க வேண்டும். தமிழக ஐயப்பன் கோயில்களின் புனரமைப்பு பணிக்கு கொடுக்கலாம்.
வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியா சுதந்திரம் பெற காந்தியடிகள் வரி கொடா இயக்கம் நடத்தினார். அதுபோல் சபரிமலை புனிதம் காக்க நாம் காணிக்கை கொடா இயக்கம் நடத்தி ஐயப்பன் துராகிகளை வெளியேற்ற வேண்டும்.இருமுடி கட்ட மாட்டோம்நாராயணன், குருசாமி, கம்பம் சுருளிவேலப்பர் கோயில் ஐயப்ப சேவா சங்கம்சபரிமலையில் தற்போது நிலவும் சூழல் கூட ஐயப்பனின் லீலை என்று தான் கருதுகிறேன்.
நீதிமன்றங்கள் அல்ல. அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் அவர். சாஸ்தாவை எவராலும் களங்கப்படுத்த முடியாது. இளம் பெண்களுக்கு இருமுடி கட்டுவது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த பாவத்தை செய்வதை காட்டிலும்எங்கள் உயிரையும் தரத் தயங்கமாட்டோம். தவக்கோலத்தில் வீற்றிருக்கும் சுவாமியிடம் சரணடைந்தால் சகலமும் தருவார்.
அவரை களங்கப்படுத்த நினைப்பவர்கள் அவரிடம் நிச்சயம்சரணடைவர். நான் 28 ஆண்டாக சபரிமலை சென்று வருகிறேன். தந்தை காளியப்பன் 60 ஆண்டுகளாக சென்றார். 150 சாமிகளுக்கு இருமுடி கட்டி அழைத்து செல்வார். அவரது பணியை தற்போது நான் தொடர்கிறேன். எங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களும் விரதம் இருப்பர். ஆனால் ஐயப்பனை தரிசிக்க வருகிறோம் என ஒரு நாள் கூட கூறியது இல்லை. ஆச்சார அனுஷ்டானங்களை பெண்ணுரிமை என்ற பெயரில் அழிக்க நினைக்கின்றனர்.

இளம்பெண்களை அனுமதித்தால் கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்டு விடும்.பொறுமை காக்க வேண்டும்தொண்டிராஜ், குருசாமி, தொண்டிசபரிமலை ஐயப்பன் கோயில் சுற்றுலா தலம் அல்ல. அங்கு வழிபாடு நடத்த தனி ஆகம விதிகள் உண்டு. இதை மீறுபவர்கள் உண்மையான ஐயப்ப பக்தர்களாக இருக்க முடியாது. ஒரு மண்டலம் கடும் விரதம் இருந்து, இருமுடி சுமந்து, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தங்களின் விரத காலங்களில் ஐயப்பனுடன் ஐக்கியமாவதை அனுபவ பூர்வமாக உணர்ந்திருப்பர். பிரம்மச்சாரி கோலத்தில் வீற்றிருக்கும் ஐயப்பனை நேருக்கு நேர் கண்டு தரிசிக்கும் போது உடல் சிலிர்க்கும்.

ஐயப்பன் கண்களை காணும்போது, அவரிடம் இருந்து மவுன அலைகள் தரிசனம் செய்யும் பக்தர் கண்களில் ஊடுருவும். இதுபோன்ற உணர்வுப்பூர்வமான அந்த ஆன்மிக பக்தி என்பது உண்மையான ஐயப்ப பக்தர்களுக்கே உரித்தானது.சபரிமலை தவிர்த்து அனேக இடங்களில் ஐயப்பன் கோயில்கள் உள்ளன.

அங்கு அனைத்து வயது பெண்களும் வழிபடலாம். எனவே சபரிமலையை மட்டும் இளம் பெண்கள் விட்டு விட வேண்டும். அதற்கான வயதை எட்டியதும் நாங்களே அழைத்து செல்வோம். அதுவரை ஐயப்பனை மனதார வேண்டுவதை ஐயப்பன் தங்களுக்கு இட்ட கட்டளையாக எண்ணி இளம் பெண்கள் பொறுமை காக்க வேண்டும். இளம் பெண்களுக்கு இருமுடி கட்டுவது என்பது ஐயப்பன் சுவாமிக்கு செய்யும் பச்சை துரோகம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 11-ம் ... மேலும்
 
temple news
கழுகுமலை; கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலின் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.மருதமலை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மன்னார்குடி; மன்னார்குடி வெண்ணைத்தாழி திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தவழும் கண்ணனாக வந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar