பதிவு செய்த நாள்
14
நவ
2018
02:11
கோவை:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதிலிருந்து, உ.பி., முதல்வர் யோகிஆதித்யநாத் பின் வாங்கமாட்டார், என, ராமகோபாலன் கூறினார்.இந்து முன்னணி நிறுவனத்தலைவர் ராமகோபாலன், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பூரில், ஒரு லட்சம் குடும்பங்கள் பங்கேற்கும் மகாயாகம் குறித்து, நான்கு ரதங்கள் ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு பகுதியாக செல்கின்றன.
இதன் மூலம், இந்துக்களை ஒற்றுமைப்படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, இந்து அமைப்புகள் டிசம்பர் வரை காலக்கெடு கொடுத்துள்ளனர்.உ.பி., முதல்வர் யோகிஆதித்யநாத், கோவில் கட்டுவதிலிருந்து பின்வாங்கமாட்டார் என நம்புகிறேன். சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து, கோர்ட்டில் வழக்கு இருப்பதால், நான் கருத்து கூறமாட்டேன்.இவ்வாறு, ராமகோபாலன் கூறினார்.