பதிவு செய்த நாள்
14
நவ
2018
03:11
தஞ்சாவூர்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு, நேற்று (நவம்., 13ல்)காலை, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல், போலீசாருடன் வந்தார். போலீசாரை வெளியே நிற்குமாறு கூறி, அவர் மட்டும் தனியாக கோவிலுக்குள் சென்றார். கோவிலில் உள்ள சிலைகளின் தன்மை குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அரை மணிநேரம் கோவில் உள்ளே இருந்து, வெளியே வந்தார். நிருபர்கள் கேட்டதற்கு, சாமி தரிசனம் செய்ய வந்தேன், என பதில் அளித்து சென்றார். இவரது ஆய்வால், ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிலைகளும் மாயமாகியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.