பதிவு செய்த நாள்
15
நவ
2018
04:11
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட முருகன் கோயில்களில் நேற்று (நவம். 14ல்) திருக்கல்யாணம் நடந்தது.
விருதுநகர்: வாலசுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தில் திரளானோர் பங்கேற்றனர். இதேபோல் மீனாட்சி சொக்கநாதர் கோயிலிலும் முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
* சிவகாசி: சிவகாசி பேச்சியம்மன் கோயிலில் ஒரு வாரமாக கந்தர் சஷ்டி விழா நடந்தது. 7ம் நாளான நேற்று (நவம்., 14ல்) திருக்கல்யாணம் நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானை மணக்கோலத்தில் வீற்றிருக்க திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*வத்திராயிருப்பு: காசி விஸ்வநாதர் கோயிலில் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு 18 வகை அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.பின்னர் சஷ்டி மண்டபத்தில் சுவாமி எழுந்தருள மாலை மாற்றும் வைபவம் முடிந்து, வள்ளி, தெய்வானை தேவியர்களுக்கு சுப்பிரமணியர்
மாங்கல்யம்அணிவித்தார்.
அப்போது சஷ்டி பாராயண வழிபாடு, சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி வீதியுலா நடந்தது.ஸ்ரீவில்லிபுத்தூர்: மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு நாளான நேற்று (நவம்., 14ல்) இரவு முருகன்
திருக்கல்யாணம் நடந்தது. கொலு மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி, தேவியர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் திருக்கல்யாண வைபவம் நடக்க திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் பட்டர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
*ராஜபாளையம்: மாயூர நாத சுவாமி கோயில் கந்த சஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதை முன்னிட்டு ராஜபாளையம் முருகன், வள்ளி, தேவசேனாவிற்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை கோயில் வளாகத்தில் பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது.
வள்ளி, தேவசேனாவுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் இளங்கோ தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.