பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழாவையொட்டி முருகன் திருக்கல்யாணம் கோலகலமாக நடந்தது.
தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலை 11:30 மணிக்கு தெய்வானைக்கும் -சுப்பிரமணிய சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகை ஆற்றுப் படித்துறையில் அருள்பாலிக்கும் சக்திகுமரன் செந்தில் கோயிலில் செந்திலாண்டவருக்கும் தெய்வானைக்கும் மாலை 4:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
*பாரதிநகர் முருகன் கோயிலில் மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அனைத்து நிகழ்வுகளிலும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தை மாற்றிக் கொண்டனர்.