பதிவு செய்த நாள்
17
நவ
2018
03:11
சென்னை;பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், பாஞ்சராத்ர தீபம் திருவிழா, 23ம் தேதி நடக்கிறது.பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், ஆண்டுதோறும், பாஞ்சராத்ர தீபம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா, 23ம் தேதி நடக்கிறது.அன்று காலை, 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசினம் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, சிறப்பு பூஜை நடக்கிறது.
மாலை, 6:00 மணிக்கு, அனைத்து சன்னிதிகளிலும், விசேஷ தீபம் ஏற்றப்பட உள்ளது.இரவு, 8:00 மணிக்கு, அனைத்து மூலவர் சிலைகளுக்கும், திருதைலக்காப்பு சார்த்தப்படுகிறது. பின், சயன
பூஜையுடன், விழா நிறைவு பெறுகிறது.