பதிவு செய்த நாள்
17
நவ
2018
03:11
கோவை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில் கர்நாடகா, கோவாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.அதன்படி, டிச., 14ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் ரயில் திருச்சி, சென்னை, சேலம், கோவை, போத்தனூர் வழியாக உடுப்பி கிருஷ்ணர், முருடேஸ்வர், மூகாம்பிகை, சிருங்கேரி சாரதா பீடம் உட்பட பல்வேறு ஆலயங்களை தரிசிக்கலாம். ஐந்து நாட்கள் கொண்ட யாத்திரைக்கு, 6,930 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பிரிவாக, டிச., 14ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் ரயில், சென்னை, சேலம், கோவை, போத்தனூர் வழியாக கோவா செல்கிறது. ஐந்து நாட்கள் கொண்ட சுற்றுலாவுக்கு, 4,725 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆலய தரிசனம் அல்லது கோவா சுற்றுலா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயணிகள் தேர்வு செய்யலாம். விபரங்களுக்கு, 9003140655, 9003140680 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.