மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2018 11:11
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நவ.,26 வரை தினமும் காலை, மாலை ஆடி வீதிகளில் அம்மன், சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு நடைபெறும். நவ.,23ல் திருக்கார்த்திகையன்று மாலை கோயில் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படும். இரவு 7:00 மணிக்கு அம்மன், சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி, சுவாமி சன்னதி தேரடி அருகில் பூக்கடைத் தெருவில் சொக்கப்பனை ஏற்றப்படும்.