பதிவு செய்த நாள்
18
நவ
2018
11:11
பழநி:பழநி முருகன் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா, நேற்று சுவாமிக்கு காப்புக் கட்டுதலுடன் துவங்கி நவ.,23 வரை நடக்கிறது.கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, பழனியாண்டவர் கோவிலில் நேற்று மாலை 5:30 மணிக்கு நடந்த சாயரட்சை பூஜையில், மூலவர் முருகர், சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், விநாயகர் மற்றும் மயிலுக்கு காப்புக் கட்டப்பட்டது.விழாநாட்களில் உட்பிரகாரத்தில் யாகசாலைபூஜை, சண்முகார்ச்சனை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ.,22ல் சாயரட்சை பூஜையில் பரணிதீபமும், நவ.,23ல் பெரியகார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு மலைக்கோவில் நடைதிறக்கப்படும்.மாலை 4:45 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரங்களில் தீபம் ஏற்றுதலும், மாலை 6:00 மணிக்கு திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதலும் நடைபெறும். இதேப்போல திருஆவினன்குடி, பெரிநாயகியம்மன் கோவிலில் கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும்.