விழுப்புரம்: விழுப்புரம் சக்தி விநாயகர் கோவிலில், கார்த்திகை முதல் நாளான நேற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்.கார்த்திகை மாத முதல் நாளான நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள சக்தி விநாயகர் தர்ம சாஸ்தா கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5:00 மணியளவில் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி குருசாமி குப்புசாமி, சுரேஷ் குருக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து வரும் 27ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.